பக்கம்:வாடா மல்லி.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 223


உட்கார்ந்திருந்த நான்குபேர் நேரடி வர்ணனை கொடுத்து, விசிலடித்தார்கள்.

“ஏய் பொட்டைங்களா. ரேட்டைக் கூட்டிட்டிங் களாமே. பொட்டைங்களா.. ஏய் பொட்டை, ஒன்னத் தான். கொஞ்சம் போஸ் கொடுமே.”

“இதுகளுக்கு இன்னிக்கு இன்னடா வந்திட்டு.” “ஏதாவது ஒரு பொட்டை வயசுக்கு வந்திருக்கும். இதோ அந்த பொட்டைக்கிட்டய கேக்கலாமே. ஏய் பொட்டை. பொட்டைப் பையா. உங்களுக்கு வயசுக்கு வாறதுன்னா என்னாடி. சொல்லு கண்ணு. கபீரிச்சி மாதிரி போறியே...”

பெரும்பாலான, அலிகள் கண்டுக்கவில்லை. இந்த மாதிரியான வார்த்தைகளை இந்தக் கடற்கரை பொறுக்கிகளிடம் மட்டுமல்லாமல், பங்களா பொறுக்கிகளிடமும் கேட்டுக் கேட்டு மரத்துப் போன மனங்கள். ஆனால் சுயம்பு திரும்பித் திரும்பிப் பார்த்தான். ஒரு சில இடங்களில் வீறாப்பாய் நின்று முறைத்தான். அவனிடமே, ஒருத்தன் வயசுக்கு வாறது பற்றிக் கேட்டதை, பச்சையம்மாவால் பொறுக்க முடியவில்லை. மகளின் பார்வையில் ஒரு வீரத் தாயாக விளங்க நினைத்தாள். மேற்கொண்டு நடக்காமல், திருப்பிக் கொடுத்தாள்.

“ஏண்டா எச்சிக்கலைங்களா... பொறுக்கிப் பசங்களா. ஒங்க வீட்லயும் ஒரு பொட்டை விழ எதுக்குடா எங்கள் வம்புக்கு இழுக்குறீங்க!”

“இது கோபப்பட்டாக்கூட அயகாத்தாண்டா துே.” “ஓங்க ஆத்தாளுங்களப் போய்க் கேளுங்கடா... ஏண்டா எங்கள சித்ரவதை செய்யுறீங்க?”

“அப்படின்னா என்னம்மா கண்ணு. சித்திரத்துல படம் போடுறதா. செந்தமிழ் தேன் மொழியாள். அவள். திட்டும் மலர்கொடியாள்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/245&oldid=1249959" இலிருந்து மீள்விக்கப்பட்டது