பக்கம்:வாடா மல்லி.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 225


பச்சையம்மாவும், குருவக்காவும் சுயம்புவோடு கூட்ட வரிசையில் பழைய இடத்தைப் பிடித்துக் கொண்டார்கள். இதற்குள், கூட்டமாய்க் கிடந்த கல்லூரிப் பயல்கள் ஜிலுக்கு ஜிலுக்குதான், குலுக்கு குலுக்குத்தான் என்று ஆரவாரம் செய்தார்கள். உடனே, பல அலிகள் அந்தக் கூட்டத்தின்மீது கொசுக்கள் மாதிரி மொய்த்து வெளிச்சத்துல பாடுறது வீரமில்லடா. இருட்டுப் பக்கமா வாங்கடா மிச்சி என்று சாதாரணமாய் கேட்டபோதே, கல்லூரிப் பயல்கள் வாயடங்கினார்கள். அலிகளும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் - எந்த செட்டை விடணும், எந்த செட்டை தொடணுமுன்னு.

அந்தக் கூட்டம், ஆளில்லாத கடலோரமாய்தான் போனது. அங்கேயும் வேடிக்கை பார்க்கும் கூட்டம் திரண்டது. அதைப் பொருட்படுத்தாமல் சிறிது நேர பிரார்த்தனை, பிறகு பாத்திமா செம்புப்பாலை கடலில் ஊற்றினாள். இப்போது அந்தக் கூட்டத்தைப் பார்த்து வெட்கத்தோடு சிரித்தாள். வயதுக்கு வந்தாச்சே.

அவர்கள் ஏதோ ஒரு பெரிய காரியத்தை முடித்து விட்ட திருப்தியில், திரும்பி நடந்தார்கள். இப்போது, வயிறு வலிப்பது மாதிரியான பசி. பந்திக்கு முந்து என்ற பழமொழிக்கு ஏற்ப ஆடியாடி ஓடினார்கள். அப்போது அந்தப் பக்கமாக ஒரு வாட்டசாட்டமான ஆசாமி. இருட்டில் சரியாகத் தெரியவில்லை. ஆனாலும், அவன் ‘சிக்னல் புரியும்படியாகவே இருந்தது. இடம் பொருள் ஏவல் தெரிந்து நடப்பதுபோல், சற்றுத் தள்ளி, சுயம்பு மேல் பார்வை போட்டபடியே நடந்தான். பச்சையம்மா குருவக்காவிடம் கிசுகிசுத்தாள்.

“எக்கா. அதோ பார் என்னையே முறைக்கான் பார். போகட்டுமா. ”

“சாப்பிட்டுட்டு போ..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/247&oldid=1249966" இலிருந்து மீள்விக்கப்பட்டது