பக்கம்:வாடா மல்லி.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 சு. சமுத்திரம்


“அதுக்குள்ள அவன் பசி அடங்கிடுமே.”

“இன்னிக்கு நல்ல நாளுடி..”

பாத்திமாவுக்கு நல்ல நாளுன்னா, எனக்கு என்ன வந்தது? எனக்கு எவ்வளவு கடன் இருக்கு தெரியுமா. அதோட, இவளுக்கு அறுக்கதுக்கு பணம் வேணும். தத்துக்கு பூஜைச் செலவு? எத்தனை செலவு இருக்குது. என் தம்பிப்பய ஒரு பைசாகூட கொடுக்காமப் போயிட்டானே! அவன் வீட்லயும் பொட்ட விழ. அய்யய்யோ முர்கேமாதா வாய் தவறி சொல்லிட்டேண்டி... அதைப் பெரிசா எடுத்துக்காதடி. என் தம்பிமேல கோபப்படாதடி. எங்க வம்சத்துக்கு நான் ஒருத்தி போதும்டி..”

“சரி, சீக்கிரமா போயிட்டு சீக்கிரமா வா. இவள எதுக்குடி இழுக்குறே.”

“இப்பவே தொழில் செய்யாட்டியும், தெரிஞ்சு வச்சுக்கட்டுமே.”

“எனக்கு என்னமோ சரியாப்படலை. அப்புறம் ஒன் இஷ்டம்!”

“கவலைப்படாத குருவக்கா. என் மகளுக்கு இஷ்டமில்லாமல் எதையும் செய்யமாட்டேன். அவள்மேல ஒரு துரும்பு விழக்கூட பொறுக்கமாட்டேன். வாடி என் ராசாத்தி.”

சுயம்புவுக்கு, ஒன்றும் பிடிபடவில்லை. ஆனாலும், அந்த சேரிப்பகுதிக்குப் போகவும் அவனுக்குப் பிடிக்கவில்லை. ஒரே நாற்றம். சுடுகாட்டு வாசனை. கருவாட்டுக் குமட்டல். கண்ணால் பார்க்க முடியாத அசிங்கம். இந்தக் கடற்கரை எவ்வளவு அகலமா இருக்கு. பச்சையம்மா குருவக்காவிடம், மகள்மேல் இருந்த தனது ஆதிபத்திய உரிமையை நிரூபிக்கும் வகையில், சுயம்புவை இஷ்டமில்லாமல்தான் இழுத்துக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/248&oldid=1249967" இலிருந்து மீள்விக்கப்பட்டது