பக்கம்:வாடா மல்லி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 3


காட்டின. அவை நெருங்க நெருங்க, தாலாட்டு மாதிரியான ஒரு சத்தம். சிறிது நேரத்தில் அதற்கு மாறான சப்தமாகவும் ஒலித்தது. அந்த மூன்று ஒளிக் குவியல்களும் ஒரு பெரிய உருவத்தை இழுத்துக்கொண்டு வருவதுபோல் தோன்றியது.

சுயம்பு அப்படியே உட்கார்ந்திருந்தான்-வருவது வரட்டும், தருவது தரட்டும் என்பது மாதிரி. ஆனாலும் அந்த மரண நெருக்கத்தில் அக்காவின் நினைவு. அண்ணன் பிள்ளைகளின் ஞாபகம். அம்மாவைப் பற்றிய தாகம். அண்ணனிடம் திட்டு வாங்க வேண்டுமென்ற ஆசை. அப்பாவிடம், சாட்டைக் கம்பால் அடிவாங்கி, தான் செய்த காரியத்திற்கு தண்டனையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மாறுவேடமோ அல்லது சுயவேடமோ போட்ட மன உளைச்சல்கள்.

குவியலாய்க் கிடந்த சுயம்பு, மீண்டும் மானுடமாய் மீண்டதுபோல், வளைந்து வளைந்து எழுந்தான். தொலைவில் வருவதை அடையாளம் கண்டுபிடித்து, கண்களை அகலமாக்கியபடியே சாலையின் ஒரத்திற்கு வந்தான். அவனை நெருங்கிவிட்ட அந்தப் பெரிய உருவம், அவனைப் பொருட்படுத்தாமல் ஓடியது. ஆனாலும் லேசாய் நிற்பதுபோல் ஒரு பாவலாக் காட்டியது. கீழே நிற்பவர்கள் தாவி, தன் மீது விழக்கூடாது என்பதற்காக, எல்லாப் பேருந்துகளும் செய்வது போன்ற பாவலாதான். அவன், அதன் அருகே நெருங்கப் போனபோது, அது பாவலாவை பாய்ச்சலாக்கியது. ஆனாலும், நடுச்சாலையில் எதையோ ஒன்றைக் கண்டு, அது நின்றது. மனிதர் என்றால் நின்றிருக்காது. ஆனால் அது ஒரு அழகான சூட்கேஸ். அதை லக்கேஜாக்காமல் போவது அந்தப் பேருந்துக்குப் பிடிக்கவில்லை. இதற்குள், அவன் எக்கி எக்கி ஒடி அந்தப் பேருந்தின் முன்னால் போய் நின்றான். ஒட்டுநர், தன்னைப் பார்க்காமல் கீழே பார்ப்பதைப் பார்த்து அவனும் தனது பார்வையை அவர் பார்வையில் தொடர விட்டான். அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/25&oldid=1248791" இலிருந்து மீள்விக்கப்பட்டது