பக்கம்:வாடா மல்லி.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



228 ♦ சு. சமுத்திரம்



பிளேடு ஊக்கிவித்தது.

“யாரை விட்டாலும் இவள விடப்படாது சார்.”

போலீஸ்காரர்கள் சொல்லப் பொறுக்காமல், பச்சையம்மாவுக்கும், சுயம்புவுக்கும் விலங்கு போட்டார்கள்.

சுயம்புவும், பச்சையம்மாவும் வாய்வலி தாங்க முடியாமல் துடித்ததால் அவர்களுக்குப் பின்னணிக் குரலாக அந்த ஆட்டோவே அலறிக்கொண்டு ஓடியது.

கையில் விலங்கிடப்பட்ட பச்சையம்மா, ஆட்டோவில் திணிக்கப்பட்ட போது விலங்கும் கையுமாய் கும்பிட்டாள்.

“அது பச்ச மதலை சார். விட்டுடுங்க சார். அது ஒட நெனச்சால ஒடியிருக்கலாம். சும்மா நின்னுதே சார். அதோட, குற்றவாளி நான்தான் சார். என் மகள் இல்ல &srss...”

அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த போலீஸாரில் ஒருத்தர் பச்சையம்மாளின் வாயில் ஒரே குத்துதான் குத்தினார். அவள் அந்த ஆட்டோவிற்குள் சரிந்து விழுந்தாள். இன்னொருத்தர் சுயம்புவின் முடியைப் பிடித்து இழுத்து அவனை அங்குமிங்குமாய் ஆட்டினார். தலைமைக் காவலர் சவாலிட்டார்.

“தேவடியாப் பையா. திருட்டு மூதேவி. யாருடா நாயி. ஒனக்கு ஆறு மாசமாவது வாங்கித் தர்ரேனா. இல்லியா பாரு...”

25

அந்த ஆட்டோவுக்குள், மேலும் நான்குபேர் தங்களை திணித்துக் கொண்டார்கள். ஏதோ பேசப் போன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/250&oldid=1248658" இலிருந்து மீள்விக்கப்பட்டது