பக்கம்:வாடா மல்லி.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 231


போலீஸ்... வாங்கிக் குடிக்கன்னு பொட்டப் பயல் கிட்ட பேசிட்டிருக்காள் சார். நான்தான் மரியாதையைக் காப்பாத்திக்கிறதுக்காக திரும்பி நடந்து பத்து நிமிஷம் கழிச்சுப் போனேன்.”

இன்ஸ்பெக்டர், பாதிக் கோபத்தோடு கேட்டார். “திட்டுனதுக்காக மட்டும்தான் பிடித்திங்களா?”

ப்போது, பச்சையம்மாவே தன்னம்பிக்கையோடு

இl த பதிலளித்தாள்.

“இல்லிங்க சார்: வழக்கம்போல பீச்ல ஒருத்தனோட. ஆனால் அவன் அடுத்துக் கெடுத்த ராக்கப்பன்.”

இன்ஸ்பெக்டர் எழுந்தார். நிதானமாக நின்றார். ஏதோ ஒரு நன்னம்பிக்கையோடு பார்த்த பச்சையம்மாவைப் பார்த்து நடந்தார். உயரத்தில் ஆறடிக்கு ஒரு அங்குலம் குறைவு. பருமனில் முப்பத்தேழு அங்குலத்திற்கு ஒன்று அதிகம். அவர் பார்த்த பார்வையில், நடந்த நடையில் சுயம்பு பயந்துபோய் பச்சையம்மாவின் முதுகுப் பக்கம் ஒளிந்தபோது -

இன்ஸ்பெக்டர் பூட்ஸ் காலால் ஒரு எகிறு எகிறினார். “எம்மா போனேனே’ என்று அலறியபடியே பச்சையம்மா கீழே விழுந்து, சுயம்புவையும் விழத்தட்டினாள். அந்த இன்ஸ்பெக்டர், சுயம்புவை கழுத்தைப் பிடித்துத் தூக்கினார். அவரது கைகளே வாயாகி அவன் கழுத்தைக் கவ்வின. அப்படியே அவனைத் தூக்கி பச்சையம்மா மேலே போட்டார். சுயம்பு ஒலமிட்டான். எக்கா, எக்கா. நான் என்ன பாடு படுறேன்னு பாருக்கா. பாருக்கா...’

அக்கா மட்டும் இதைப் பார்த்தால்... இன்ஸ்பெக்டரை சும்மா விடுவாளா? எக்கா. எக்கா. இங்க வாக்கா இங்க வந்து பாருக்கா. மரகதக்கா...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/253&oldid=1250224" இலிருந்து மீள்விக்கப்பட்டது