பக்கம்:வாடா மல்லி.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 233


சுயம்பு, “மரகதக்கா, மரகதக்கா...” என்று மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லி அழுதான். ஒரு தொப்பி மிரட்டியது.

“ஏண்டா. மரகதக்கா எங்கடா இருக்காள்? எங்க இருந்தாலும் அந்தப் பொட்டப் பயல நான் சொன்னேன்னு ஸ்டேஷனுக்கு வரச் சொல்லனும். தெரிஞ்சுதா...”

சுயம்பு துடித்துப் போனான். கையைக் கட்டிய விலங்கை வைத்தே அவரை அடிக்கப் போவதுபோல் உடம்பை ஆட்டினான். இதைப் பார்த்து ஏதோ ஒன்றைப் புரிந்துகொண்ட ரைட்டர், தலையைக் கவிழ்த்தி, எழுதியபடியே யோசனை சொன்னார்.

“பச்சையம்மா அப்படியே இருக்கட்டும். அந்த சின்னப் பொட்டையோட டிரஸை எடுத்துட்டு ஜட்டியோட விடுங்க. பக்கத்துல எதையும் வைக்காதீங்க. தூக்குப் போட்டு சாகப் போறவன்மாதிரி முழிக்கான் பாருங்க. அப்புறம். சொல்றதைக் கேட்காமல் கஸ்டடி டெத், கற்பழிப்புன்னு வம்ப விலைக்கு வாங்காதீங்க..”

ஒரு போலீஸ்காரர் ஜோக்கடித்தார். “கற்பழிப்புக்குப் பிறகுதான் சார் கஸ்டடி டெத்து. மாத்திச் சொல்லுறீங்க..” -

‘ஒன்னமாதிரி ஆளுங்க பிணத்தைக்கூட கற்பழிப்பீங்க... மூள இருக்காய்யா ஒனக்கு. சீரியஸ் சமாசாரம் பேசறேன்னு தெரியல...”

“எஸ் சார்.”

இதற்குள், இந்தக் காவில்’நிலையத்தின் பின் கதவு திறக்கப்பட்டது. மூன்று கான்ஸ்டபிள்கள் லத்திக் கம்புகளோடும், ரூல்தடியோடும் பச்சையம்மாவையும் சுயம்புவையும் தள்ளிவிட்டார்கள். பிறகு இவர்களும் துள்ளிக் குதித்து அங்கே போய் கதவைத் தாழிட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/255&oldid=1250229" இலிருந்து மீள்விக்கப்பட்டது