பக்கம்:வாடா மல்லி.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 சு. சமுத்திரம்


திறந்த வெளி. சுற்றுமுற்றும் சுவர். நான்கைந்து மரங்கள். ஒரு பெஞ்சில் ஒரு லுங்கிக்காரன் குறட்டை போட்டுத் தூங்கினான். அவன் தலைமாட்டில் ஒரு பெண். அவளும் தூக்கம்.

ஒரு போலீஸ் சுயம்புவின் சேலையை அவிழ்த்தார். ஜாக்கெட்டைக் கிழித்தார். பிறகு அவனை உற்றுப் பார்த்து, “பூ... இதுக்குத்தான் இவ்வளவு அமர்க்களமா...’ பாவாடையைக் கீழே கொண்டு வந்தார். மெல்லக் கண்ணைத் திறந்தார். அவருக்கும் பொட்டைக எப்படி இருக்கும் என்று பார்க்க ஒரு ஆசை. ஆனால், அவன் ஜட்டி போட்டிருந்தான். அதற்காகவே, அவனை அடித்தார். லத்திக் கம்பால் குத்திவிட்டார். முட்டியைப் பிடித்து இழுத்து முட்டிக்கு முட்டி தட்டிவிட்டார். அவன் வலி பொறுக்காமல் அலறியபோது, பச்சையம்மா, ‘ஏற்கெனவே சூடுபட்ட பிறவிய்யா... அடிபட்ட உடம்புய்யா. அடிக்கணுமுன்னா அவளுக்கும் சேர்த்து என்ன அடியுங்கையா” என்று மருவினாள். மன்றாடினாள். கும்பிட்டாள். கும்பிட்ட கரங்களை எடுக்காமலே நின்றாள்.

போலீஸார் அந்தச் சவாலை, ஏற்றுக்கொண்டார்கள். ஒருவர் தோளைப் பிடித்து அவளை உட்கார வைத்தார். இன்னொருத்தர் முட்டிக்கால்கள் வரைக்கும் அவள் புடவையை மடித்துவிட்டார். பிறகு இரண்டு கால்களை நெருக்கி வைத்துக்கொண்டு, கால் பாதங்களை வளைத்துப் பிடித்துக்கொண்டார். ரூல்தடிக்காரர், அந்தக் கால்களில் அந்தத் தடியை வைத்து உருட்டினார். நிலத்தை ஏர்க்கலப்பை உழுவது மாதிரியான உருட்டல், உழுத நிலத்திலிருந்து வருவது போன்ற கசிவு. நீர் கொண்ட மண். ரத்தம் உண்ட சதை. பிராணனை பிடுங்கும் வலி.

“எம்மா.. எம்மா.. முர்கே மாதா. இவனுவ வீட்லயும் ஒரு பொட்டை விழ! ஐயோ, என் கண்ணு போச்சே! ஐயோ என் காது போச்சே.!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/256&oldid=1250230" இலிருந்து மீள்விக்கப்பட்டது