பக்கம்:வாடா மல்லி.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 சு. சமுத்திரம்


வீங்கி இருந்தன. இமைகள் பெருத்துக் கண்களை மறைத்தன. குருவக்காவைத் தட்டுத் தடுமாறிப் பாதிப் பார்வையால் அடையாளம் கண்ட பச்சையம்மா, கதறினாள். கதறிய வாயில் ஒரு லத்தித் தட்டு. கப்சிப்.

இன்ஸ்பெக்டர், மகளிர் அணியை ரசனையோடு அனுப்பி வைத்தார். ஆண்கள் அணியில் ஒரே ஒருவரை மட்டும் நிறுத்திவிட்டு, மற்றவர்களை வெளியே அனுப்பினார். அவர்கள் போனதும் கைவிலங்கோடு நின்ற பச்சையம்மாவை உற்றுப்பார்த்து, பாடம் நடத்தினார்.

‘ஒன் பேர்ல இன்னிக்கு மாற்றமில்ல... பச்சையம்மாதான். அதோ நிக்கான் பாரு. பிச்சுமணி. அவன் கொடுத்த கால் கிலோ கஞ்சாவை காலேஜ் பக்கமா கொண்டு போகப் போனே. அதுக்காக அவன்கிட்ட முந்நூறு ரூபாயும் அட்வான்ஸா வாங்கிட்டே... அதுக்குள்ள. நானும் அந்தக் கான்ஸ்டபிளும் கஞ்சா கை மாறுனபோது வெடுக்குன்னு பிடிச்சிட்டோம். நல்லா ஞாபகம் வச்சுக்க. கோர்ட்ல சொல்லும்போது மாற்றிச் சொல்லிடாதே, அப்புறம் லத்தி பிஞ்சுடும்.”

பச்சையம்மா, புலம்பப்போனபோது, குருவக்கா சிறிது தைரியப்பட்டு, இன்ஸ்பெக்டர் முன்னால் வந்தாள். அவரைக் குனிந்து கும்பிட்டாள். சேவலாசனம் போட்ட முர்கேமாதாவை எப்படிக் கும்பிடுவாளோ, அப்படி அந்தத் துப்பாக்கி மனிதரைக் கும்பிட்டாள். கும்பிடும் கையுமாகக் கெஞ்சினாள். -

“ஸார்.ஸார். நீங்க கூப்பிட்ட குரலுக்கெல்லாம் வாறவங்க நாங்க.. குடிசைக்கு, நீங்க ஆள் சொல்லி அனுப்பினாலே போதும். நேர கோர்ட்டுக்கு வந்து செய்யாத குற்றத்தை செய்ததாயும், சொல்றோம். கைக் காசுலேயே அபராதமும் கட்டறோம். இந்த ஒரு தடவை மட்டும் இந்த பச்சையம்மா செய்த குற்றத்தை கோர்ட்ல சொல்லுங்க சார். பொய் கேஸ் வேண்டாம் ஸார்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/258&oldid=1250248" இலிருந்து மீள்விக்கப்பட்டது