பக்கம்:வாடா மல்லி.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 237


“ஏய் குருவக்கா. கிண்டலா பண்றே. ஒன்ன மாதிரி பொட்டைங்க விபச்சாரம் செய்யுறதா கோர்ட்ல வழக்குப் போட்டால், ஜட்ஜ் சிரிப்பார். எனக்கே சிரிப்பு வரும். அப்புறம் கொஞ்சநாளா ஒன்ன காணலை. ஏன்?”

“கூவாகம் கோயிலுக்குப் போயிருந்தேன் சார். அப்புறம் கோர்ட்ல நாங்க செய்யுற தொழிலையே சொன்னா என்ன சார்? அப்படியாவது ஜட்ஜுக்கு கண் திறக்கட்டும். சர்க்காருக்கு புத்தி வரட்டுமே.”

‘குருவக்கா... நீ ஒவராப் போறே... மாமூல்காரியேச்சுன்னு விட்டு வைக்கேன்.”

“அந்தப் பாசத்துலதான் சார் நான் பேசுறேன். வேற இன்ஸ்பெக்டரா இருந்தால், பேசமாட்டேன் சார். தயவுசெய்து கேளுங்க சார்... எங்கள மாதிரிப் பொட்டைகளை. யாரும் வீட்டு வேலைக்குச் சேர்க்க மறுக்காங்க. சில்லறை வியாபாரம் செய்தால், பொறுக்கிப் பசங்க கிண்டல் பண்றாங்க... எங்களுக்கும் வயிறு இருக்கே சார். அதனாலதான சார் வேற வழியில்லாமல் இந்தப் பொழப்பு செய்யுறோம் சார்... நாங்களும், நல்ல குடும்பங்கள்ல இருந்து நாசமாகி வந்தவங்கதாங்க சார். அதோ அதுகூட என்ஜினியரிங் காலேஜ்ல படிச்சுது சார். அரசாங்கம் ஊனமுற்றவங்களுக்கு உதவி செய்யுது... பெண்களுக்கு எல்லாம் செய்யுது. ஆனால், பெண்ணாவும் ஆகாமல், ஆணாவும் போகாமல் அந்தரத்துல நிற்கிற எங்களுக்கு என்ன சார் செய்யுது. இவள விட்டுடுங்க சார். இல்லாட்டால் நிச வழக்கு போடுங்க சார்.”

“ஒனக்காக என்ன வேணுமுன்னாலும் செய்வேன். ஆனால், இவள விடப்போறதாய் இல்ல.”

‘பொறுக்கிப் பயல்க எங்களை கத்தியக் காட்டி பணம் பறிக்காங்கன்னு ஒங்ககிட்ட எத்தனையோ தடவை எழுதிக் கொடுத்தோம். எழுதிக் கொடுத்ததைத்தான் கிழிச்சுப்

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/259&oldid=1250252" இலிருந்து மீள்விக்கப்பட்டது