பக்கம்:வாடா மல்லி.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 241


சொல்வதுபோல் விரக்திப் பார்வை போட்ட சுயம்புவைப் பார்த்து ஒப்பாரி வைத்தாள்.

“நான் ஒன்ன பொழப்புக்கு அனுப்பமாட்டேன் மவளே. இவங்க ஒன்ன எங்க அனுப்பி வச்சாலும் எங்கிட்ட ஒடி வந்துடு மவளே. இவங்க என்ன பாடு படுத்துனாலும் அதுக்கு மருந்து போட நான் இருக்கேண்டி. நீ வாரது வரைக்கும் நான் உண்ணவும் மாட்டேன் ஒறங்கவும் மாட்டேன். ஒன்ன போலீஸ் வரைக்கும் கொண்டு வந்துட்டேனே மவளே.”

பச்சையம்மாவை, போலீஸ்காரர்கள் மீண்டும் அடிக்கப் போனார்கள். அவளோ வாயிலும் வயிற்றிலும் தலையிலும் அடித்துக்கொண்டு கால்களைத் தரையில் தூக்கித் துக்கிப் போட்டுக்கொண்டும் அல்லோகல்லோலப் பட்டதால், அந்தப் போலீஸ்காரர்களுக்கு அவளிடம், அடிக்க இடம் கிடைக்கவில்லை. அந்த ஏமாற்றத்தை அவளை இழுப்பதில் ஒரு வேகமாக்கி, வேனுக்குள் ஏற்ற, வெளியே கொண்டு போனார்கள்.

27

சுயம்பு, ஆண் என்றோ, பெண்ணென்றோ தன்னை அடையாளம் காணாமலும் அடையாளப்படுத்திக் கொள்ளாமலும், ஏதோ ஒரு ‘பிறவி என்பது போல் நின்றான். -

இன்ஸ்பெக்டர், அவன் உடலனைத்தையும், தேடிப் பார்த்தார். ஜட்டியோடு மட்டுமிருந்தாலும், அந்தப் பார்வை தாங்கமாட்டாது சுயம்பு, தனது கைகளை எடுத்து குறுக்கே போட்டுக் கொண்டான். அவனை அடிப்புதற்காக எழுந்திருக்கப் போனவர், அவன் முகம் மாவுபோல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/263&oldid=1250287" இலிருந்து மீள்விக்கப்பட்டது