பக்கம்:வாடா மல்லி.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 243


“சொல்றேன். எங்க அம்மாவ விட்டுடுவீங்களா.. அப்போ வேனுல ஏறுனாங்களே.”

“அவளா ஒங்க அம்மா.”

“அப்படின்னு அவங்கதான் சொல்றாங்க. அவங்கள விட்டுடுவீங்களா!”

“எங்களுக்கு அதைவிட வேற வேலை இருக்குடா. சொல்லு.”

“ஊரு நல்லாம்பட்டி. மதுரைக்கும், துரத்துக்குடிக்கும் மத்தியில... அப்பா பேரு பிள்ளையார் என்ஜினியரிங் காலேஜ்ல படிச்சேன்: சேல கட்டிக்க ஆசை வந்தது. அந்த ஆசை எங்க அக்கா கலியாணத்தையும் அடிச்சுட்டு போயிடிச்சு.”

சுயம்பு, அந்த இன்ஸ்பெக்டரையே ஒரு ஆறுமுகப் பாண்டியாக, நினைத்ததுபோல் அழுதான். அழுது அழுது, சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னான். அவனுக்கு, தான் இப்படி ஆகிவிட்டோம் என்பதைவிட, அக்காள் கலியாணம் நின்றுபோனதே பெரிதாய்த் தெரிந்ததைப் புரிந்துகொண்ட இன்ஸ்பெக்டர், சிறிது சிறுமைப்பட்டார். “நானும் இருக்கேன். எனக்கும் ஒரு சிஸ்டர். அவளையும் ஒரு கிரிமினலாவே பார்க்கேன்.”

இன்ஸ்பெக்டர் இப்போது மனிதக் குரலில் பேசினார்.

“இந்தாப்பா. இவன எதுவும் செய்யாதீங்க. இவனுக்கு எங்க ஊர்ப்பக்கம். இவன் ஏரியா போலீசுக்கு இன்பர்மேஷன் கொடுத்துடுங்க. இவன அவங்கமூலம் இவன் வீட்ல ஒப்படைக்கணும். அந்தப் பொட்டப் பயல்வள இவனப் பார்க்க விடாதீங்க. ஏதாவது வாங்கிக் கொடுங்க. அங்கே போய் உட்காருடா...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/265&oldid=1250302" இலிருந்து மீள்விக்கப்பட்டது