பக்கம்:வாடா மல்லி.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 245


சுயம்பு, வீறாப்பாய் உட்கார்ந்தான் மாட்டேன், பார்க்க மாட்டேன்; போனால்தானே பார்க்க. அப்போ.

சுயம்பு, அங்குமிங்குமாய் நோட்டமிட்டான். பின் பக்கமும், கிழக்குப் பக்கமும் சின்னச் சுவர்கள்தான். ஒரே தாவில் குதித்து விடலாம். தப்பித்தாக வேண்டும். இல்லையானால், வீட்டுக்குக் கொண்டு போகப்பட்டு, அந்த வீடே ஒரு லாக்கப்பாகும். இவன் பிரச்னையே, அந்த வீட்டுக்கு ஒரு தண்டனையாகும்.

சுயம்பு, கிழக்குப் பக்க சுவர் அருகே போனான். எக்கிப் பார்த்தான். சரிப்படாது. ஏதோ ஒரு கம்பெனி. பழையபடியும் பிடிபட்டு, முன்பக்கம் வழியாய் இந்தப் பின்பக்கத்திற்குக் கொண்டுவந்து விடுவார்கள். அவன், அந்தச் சுவரைப் பிடித்தபடியே பின்பக்கமாய் வந்தான். எட்டிப் பார்த்தான். குடிசைப் பகுதி. இதற்கும் அந்தப் பகுதிக்கும் இடையே ஏகப்பட்ட மரியாதைத் தனமான இடைவெளி.

அந்தச் சுவரில் கை போடப்போன சுயம்பு, தன்னையே பார்த்துக் கொண்டான். ஜட்டி. இதோடு போனால், அவன் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறானே, கீழ்ப்பாக்கம், அங்கே சேர்த்துவிடுவார்கள். அவன் மீண்டும் இருந்த இடத்திற்கே வந்தான். இப்போது போலீஸ் நடமாட்டம் முன்பக்கம்கூட அதிகமாக இல்லை. லேசாய் பின் கதவைச் சாத்தினான். கீழே குவியலாய்க் கிடந்த சேலையைப் பார்த்தான். அதன் மேலேயே பல பூட்ஸ் தடங்கள். அவன் அந்தப் புடவையை எடுத்தான். பச்சைக்கரை போட்ட வெளிர் மஞ்சள் புடவை. கட்டலாமா... பட்டறிவு எச்சரிக்க, அவன் பகுத்தறிவுவாதியானான். அந்தச் சேலையை அவன் இரண்டாகக் கிழித்தான். ஒன்றை இடுப்பில் சுற்றிக் கொண்டான். ஒன்றை இடுப்புக்குமேல் கழுத்துவரை சுற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/267&oldid=1250311" இலிருந்து மீள்விக்கப்பட்டது