பக்கம்:வாடா மல்லி.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 சு. சமுத்திரம்


உடம்பின் ஒரு அங்குல இடைவெளி தெரியாமல் தன்னை மறைத்துக்கொண்டான். மறைந்து கொண்டான்.

ஆனாலும், அவனுக்கு ஒரு உறுத்தல், போலீஸார் தன்னை இவ்வளவு தூரம் நம்பும்போது, இப்படிப் போகலாமா? ஏன் போகக்கூடாது. காரணம் இல்லாமல் என்னை எதுக்காகக் கொண்டு வரணும். இந்தக் காரணமின்மையே நான் தப்பிக்க ஒரு காரணம்.’

சுயம்பு, பின்புறமாய் நகர்ந்து, அந்தச் சுவரைப் பிடித்தபடியே காவல் நிலையத்தின் பின் சுவர்ப்பக்கம் வந்தான். இரண்டு கைகளையும், ஊன்றியபடி ஒருபக்கமாய் உடலைச் சாய்த்து, அதில் ஏறினான். மறுபுறம் காவாய்ச்’ சுவரில் குதித்தான். நல்லவேளை, யாரும் பார்க்கவில்லை. கிழக்குப் பக்கமாக ஓடினான். ஒரு முட்டுச் சந்து அங்கிருந்து, தெற்குப் பக்கமாய் போய், குடிசைப் பகுதிக்குள் மறைந்து. அதன் மேற்குப் பாதை வழியாய் நடந்து. மனிதக் கூட்டத்தில் கரைந்து அங்குமிங்குமாய் திரும்பித் திரும்பி ஓட வேண்டிய வெட்ட வெளியில் ஒடி, நடக்கவேண்டிய சந்தடிப் பகுதியில் நடந்து, நிற்க வேண்டிய ‘பல்லவப் பகுதிகளில் நின்று -

சுயம்பு எப்படியோ சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டான். ஏதோ ஒரு போலீஸ் ஜீப் அவன் பக்கமாக நகர்வது போல், ஒரு மாயை. டிக்கெட் வாங்கப் போவது போல் ஓடினான். ஒரு இடுக்கு கவுண்டர் வழியாக நடந்து மறுபக்கம் போய் மற்றொரு வாசல் வழியாய் உள்ளே காத்திருப்போர் கூட்டத்தில் கலந்து கொண்டான். பயணச் சோர்வில் படுத்தவர்கள். பயணத்திற்காகத் துடிப்பவர்கள். எதுவுமே புரியாமல் விழிப்பவர்கள். அழுகின்ற குழந்தைகள், எங்கும். ஏதோ ஒரு அவலச் சத்தம் மாதிரியான ஓசை. சிறிது நேரத்தில் சில போலீஸ் தொப்பிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/268&oldid=1250325" இலிருந்து மீள்விக்கப்பட்டது