பக்கம்:வாடா மல்லி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 5


அழகுகள். மகளிர் பகுதியிலும், இதே விகிதாச்சாரம். ஒருத்தி குளிருக்காக உடம்பைத் தலையோடு சேர்த்து முக்காடு போட்டு முன்னிருக்கையின் பின்புறக் கம்பிக்கு அப் பாலும், பாதி உடம்பைப் போட்டிருந்த விதம், பதினாறு முழப் பட்டுப் புடவையை நீள வாக்கில் மடித்து அந்தக் கம்பியில் தொங்கப் போட்டதுபோல் இருந்தது. இன்னொருத்தியான, இளஞ்சிட்டு, ஜன்னலோர இருக்கையில் தனித்திருந்து தூங்காமல் தூங்கி சுகம் பெற்றுக் கொண்டிருந்தாள். ஒரு கிழவியம்மா, தனது இருக்கைக்கு முன் பக்கமுள்ள இருக்கையில் கம்பியில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிறுமியின் சடையைப் பற்றுக்கோலாய் பற்றியபடியே துாக்கத்தில் தலையை மேலும் கீழும் போட்டாள். இதனால் அந்தச் சிறுமியின் தலை கீழும் மேலுமாய் ஆடியது. ஆனாலும், இருவருக்கும் சடைத் தனமான தூக்கம். ஒரு தாய்க்காரி அக்கம் பக்கம் பார்த்த படி, மகளின் மாராப்பை அகலப்படுத்தி விட்டாள்.

மங்கல்ான விளக்கில், அந்தப் பேருந்துக்குள் இருந்த துரங்காத கண்கள் அத்தனையும் ஒரு கையில், சூட்கேலைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு மறு கையால் மேல் கம்பியைப் பிடித்துத் தடுமாறிய அவன் மீது மொய்த்தன. அவன் ஓரளவு தன்னை நிலைப்படுத்தியபோது, பாதிக் கண்கள் திரும்பின. ஆனாலும், மீதிக் கண்கள் அவன் உட்காருவது வரை, திசைமாறப் போவதில்லை என்பது போல், ஒரு மனிதநேய வீச்சோடு, அவன்மீதே நிலை கொண்டன. அவனோ, பார்த்த கண்களைப் பார்க்காமல், பாராத கண்களையே பார்த்தான். ஆண் வரிசையில், அவன் கண் போகவில்லை. தாய்க்குலத்தின் வரிசையையே மாறிமாறிப் பார்த்தான். அந்த இளஞ்சிட்டு தனித்திருந்த இடத்தை தனித்துப் பார்த்தான். பேருந்தின் குலுக்கலுக்கு ஏற்ப குலுங்கிய உடம்பைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டே, மேல் கம்பியைப் பிடித்த கையை அதன்மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/27&oldid=1248787" இலிருந்து மீள்விக்கப்பட்டது