பக்கம்:வாடா மல்லி.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 249


போவதுபோல், காலையிலேயே புதுதில்லி ரயில் நிலையத்தில் வந்து நின்றது.

சுயம்புவுக்கு அந்த ரயில் நின்றதுசுட நினைவில்லை. சில மனிதர்களைக் கழித்துவிட்டு, சில மனிதர்களைக் கூட்டிவிட்டு, அது மீண்டும் புறப்படும் என்று நினைத்தான். அவன் பாட்டுக்கு உட்கார்ந்துகொண்டான். எப்படியோ அந்தப் பெட்டியின் வெறுமை புரிந்து, கீழே இறங்கினான். டிராலி வண்டிச் சத்தங்கள். பிரிந்தவர் கூடிப் பேசிய பேச்சுக்கள். ஆயிரம் தலைகொண்ட அதிசயப் பிறவி ஒன்று நகர்வது போன்ற மனிதக்கூட்டம். க்யா காலே. ஏமண்டி. எந்தா...யா...’ போன்ற வார்த்தைகள் அத்தனைக்கும் பொதுவான இன்னொரு வார்த்தை. அச்சா’

சுயம்பு, தனக்கு ரயிலில் கிடைத்த மரியாதையின் காரணகாரியங்கள் புரியாமல், தன் பாட்டுக்கு நடந்தான். முன்னால் ஒரு சத்தம் மனுஷன் போவானா. ஊருக்கு. என்ன தருவோம்னுதான் பாக்காங்களே தவிர, என்ன வேணும்னு கேட்கலை. நீங்க ஒண்ணு. அது ஒங்களோட பார்வை. எனக்கு இந்த ரயிலிலேயே இங்கயே நின்னு திரும்ப ஊருக்குப் போகலாம்னு ஒரு ஆசை வருது:

சுயம்பு, அந்த ரயிலை தேவதூதுவனாகவும், அசுர உருவாகவும் அனுமானித்த அந்த ஆணுக்கும், பெண்ணுக்கும், இணையாக நடந்து இரும்புப்படிகளை ஏறி, அவர்கள் பக்கமாகவே நடந்தான். மூன்று நாட்களுக்குப் பிறகு முதல் தடவையாய்த் தமிழைக் கேட்டது மகிழ்ச்சியாக இல்லையென்றாலும், துக்கச் சுமையைக் குறைத்தது. அவர்கள் மெளனமாக நடந்தபோதெல்லாம், இவன் பேசுங்கள், பேசுங்கள் என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். ஆகாயப் பாலத்தில் அவர்கள் பக்கமே நடந்து, அவர்கள் பக்கமே இறங்கினான். இதற்குள் அவர்கள் கையிலுள்ள சூட்கேஸ்களையும். ஒரு சின்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/271&oldid=1250343" இலிருந்து மீள்விக்கப்பட்டது