பக்கம்:வாடா மல்லி.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 சு. சமுத்திரம்


ஒரு வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்ட கூட்டுக்குரல். பச்சையம்மா. குருவக்கா மாதிரியான தோரணைகள். அதே சமயம் வாளிப்பான முகங்கள்.

அவன் தனது உண்மையான சொந்தங்களைக் கண்டதுபோல், ஒடிப்போய் - அந்த முள் மலர்களுக்கு மத்தியில், மகரந்தத் தண்டாய் நின்றான்.

அந்த வீட்டிற்குள் ஆடல் பாடலாய்க் குதித்தவர்கள் எல்லாரும் வெளியே ஓடிவந்து அவனைச் சுற்றி வட்டமாய்ச் சூழ்ந்து கொண்டார்கள். மொத்தம் ஐந்துபேர். ஒன்று அசல் காளி மாதிரியான தோற்றம். வஞ்சகம் இல்லாமல் வளர்ந்த உடம்பு. மங்கலான வெள்ளை. கழுத்தோடு சேர்த்து தொங்கப் போடப்பட்ட டோலக். இன்னொன்றின் கையில் புல்புல்தாரா. சதுரமான படிமப் பெட்டியின் பட்டன்களை அழுத்தி அழுத்தி, அதன் மூலம் மெல்லிய கம்பிகளை மேல் கம்பிமேல் தட்டவிட்ட குள்ளமான உருவம். மூன்றாவது அசல் அழகுமயம். உதட்டுச் சாயம்தான் அதிகம். மோவாய் நீளத்திற்கான பின்கொண்டை. தெலுங்குச் சாடை... மற்றொன்று, கன்னட வாடை. ஒரு கண்ணைச் சுண்டி, மறுகண்ணைச் சீண்டிவிட்டுப் பார்க்கும் குறும்புப் பார்வை. நாட்டுக் கட்டை உடம்பு. உருக்கு வட்டக் கம்பிக் கண்கள். மற்றொன்று, நம்ம ஊரின் அந்தக் காலத்து ஒடக்கு’ மாதிரியான் ஒல்லி.

சுயம்பு கிட்டத்தட்ட குட்டிச்சாமியார் போல் மற்றவர்களுக்குப் பட்டாலும், அவர்களுக்கு அல்லது அவள்களுக்கு, அவனுக்குள்ளே ஒரு ‘குட்டி இருக்கும் அடையாளம் தெரிந்தது. ஆளுக்கு ஆள், அவன் கையையும் காலையும் தொட்டார்கள். எதிர்பாராத இனிய விருந்தாளி வந்தால் எப்படிக் குதுகலிப்போமோ. அப்படி. அவள்கள் டோலக்கைத் தட்டிவிட்டு, புல்புல் தாராவை ஒலியெழுப்பி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/276&oldid=1250380" இலிருந்து மீள்விக்கப்பட்டது