பக்கம்:வாடா மல்லி.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 255


அவனைச் சுற்றிச் சுற்றியே ஆடினார்கள். டோலக்காரி கேட்டாள். அந்தக் கேள்விக்கு பதிலும் சொல்லிக் கொண்டாள். நீ யாரு. ஒனக்கு நாங்க இருக்கோம். பிகர் மத் கரோ.

அவன், புரியாமல் முழித்தபோது, மொழி ஒரு முக்கிய விஷயம் இல்லை என்பது போல் டோலக்காரி, அவன் முதுகையும் டோலக் மாதிரியே தட்டினாள்.

இதற்குள், எல்லோரும் சுயம்புவை இடுப்பிலும் தோளிலும் கை போட்டபடி, அவனை, எந்த வீட்டிலிருந்து வெளிப்பட்டார்களோ அங்கே கூட்டிப் போனார்கள். அவனுக்கும், அவர்களைப் பார்க்கப் பார்க்க, அவர்களின் வாய்களில் துள்ளி, தனது காதுகளில் விழுந்த வார்த்தைகளில் இனம் கண்டான். தேனைக் கொடுத்து மகரந்தத் துளை வாங்குவதற்கு மலர்ந்த மலர்போல், வாய் விரித்தான். அவர்கள் அருகே நிற்பதிலேயே ஒரு ஆனந்தம். பட்ட பாடெல்லாம் பழங்கதையானது போன்ற இரட்டிப்பு சந்தோஷம்.

அந்த டுரூம்செட'டின் முதலாவது அறையின் மத்தியில் இரண்டு வெள்ளைக் கம்பிகளுக்கு இடையே இணைக்கப்பட்ட பச்சைக் கம்பிக்குக் கீழே ஒரு தொட்டில். பூ மெத்தை போன்ற வெல்வெட் மெத்தை. ஒரு நான்கு மாதக் குழந்தை ஒன்று மல்லாந்து கிடந்தது. அவள்கள் இல்லாமல் அழப்போன அந்தக் குழந்தை, இப்போது அவர்களைப் பார்த்துவிட்டு, பொக்கைவாய்ச் சிரிப்பைச் சிந்தியது. கைகளை லேசாய்த் தூக்கப் போனது. அந்தத் தொட்டில் அருகே ஒரு மோடாவில் இருந்த இருபத்துநான்கு வயதுப் பெண், அந்தக் கூட்டத்தில் புதிதாய் நின்ற சுயம்புவைப் புதுநோக்காய் நோக்கினாள். பிறகு, கீழே குனிந்து குழந்தையின் வாயோரத்தை முந்தானையால் துடைத்தாள். அப்போது முப்பது வயதுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/277&oldid=1250391" இலிருந்து மீள்விக்கப்பட்டது