பக்கம்:வாடா மல்லி.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 சு. சமுத்திரம்


காரன் பாண்ட் சிலாக்கோடு, இரண்டாவது அறையிலிருந்து வெளியே வந்தான். அதுவரை குழந்தையைப் பார்த்துக் கையை அங்குமிங்கும் ஆட்டி வேடிக்கை செய்த அந்த ஐவரும் இயங்கத் துவங்கினார்கள்.

காளியக்கா மாதிரியானவள் டோலக்கை, இரண்டு கைகளால் வருடிவிட்டாள். தடவிவிட்டாள். அப்புறம் தட்டோ தட்டென்று தட்டினாள். திரும்பி வந்து தொட்டிலில் வயிற்றோடு சேர்த்து முதுகைத் துக்கிய குழந்தையின் முன்னால், டோலக்கை கொண்டுபோய் ஒரு சின்னத் தட்டுத் தட்டிவிட்டு, மீண்டும் அதை வெளியே கொண்டுவந்து நொறுக்கித் தள்ளினாள். உடனே அத்தனைபேரும் பம்பரமாய்ச் சுழன்றார்கள். இசைக் கருவிகள் இல்லாத மூவர், கைகளைத் தாள லயத்தோடு தட்டினார்கள். டோலக்காரி, வாயைத் திறந்து தொகையறா பாடியபோது, சும்மா இருந்ததுகள் அப்புறம் அவள் எதுகை மோனையோடு பாடியபோது, துள்ளி துள்ளிக் குதித்தார்கள். அதனால், அவர்களின் தலைகளிலிருந்தும் பூக்கள் தரையில் துள்ளின. அவள் வேக வேகமாய்ப் பாட, மற்றவர்கள் அணில் அணிலாய்த் தாவினார்கள். உடனே டோலக்கின் டொக் என்ற சத்தத்துடன் பாட்டை மொட்டையாய் முடித்து காளியக்கா மூச்சு விட்டபோது, அவள்கள் கால்களும் அப்படியே ஒருச்சாய்த்து நின்றன. மழை விட்டது போன்ற சூழல். கால் நிமிடத்தில், ஒரு பெருஞ்சப்தம். அப்புறம் மெட்டுச் சத்தம், மேடும் பள்ளமுமான ராகம். உடைவும் குடைவுமான குரல். உடம்பைக் குலுக்கி ஒரு குதி. உச்சக்குரல் நிற்கும்போது ஒரு முக நிமிர்வு. இதையடுத்து மெட்டச் சிட்டான பாடல். உடனே முன்னால் ஒரு துள்ளல். பின்னால் ஒரு தாவல். ஒருத்தி சுயம்புவையும், அங்குமிங்குமாய் ஆட்டி விட்டாள். இடையை இடையால் இடித்துவிட்டாள். மீண்டும் ஒரு பாட்டு. ஷாதி கியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/278&oldid=1250397" இலிருந்து மீள்விக்கப்பட்டது