பக்கம்:வாடா மல்லி.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 257


டிசம்பர்மே. பச்சா பைதாகுவா! செப்டம்பர்மே, குவா பச்சேகோ சார் மகினே.” அவர்கள் பாடிக்கொண்டே போனார்கள்.

பிள்ளைக்காரி டில்லிக்குப் புதுசு: இந்தியை இஞ்சி தின்றதுமாதிரி கேட்பவள். அந்தப் பாடலுக்கு அர்த்தம் புரியவில்லை. ஆனாலும், கணவன் சிரித்ததில் அவளும் சிரித்தாள். தூர்தர்ஷனில் வேலை பார்க்கும் கணவனின் பாண்ட் பையைப் பிடித்திழுத்து, அந்தப் பாட்டுக்கு அர்த்தம் கேட்டாள். அவனும், அந்த தர்சனுக்கே உள்ள இலக்கணப்படி கொஞ்சம் கை வரிசையையும் கலக்கவிட்டு, மொழி பெயர்த்தான்.

“செய்தாளே கல்யாணம் டிசம்பரில்... பெற்றாளே பிள்ளை செப்டம்பரில்... வந்ததே பிள்ளைக்கு நாலு மாசம்... வளருதே இவள் வயிற்றில் ஒரு மாசம் போவாளோ மாட்டாளோ அம்மா வீடு. ‘போக்கிரி அம்மாவுக்கும் மூணுமாசம்.” அவன் கிட்டத்தட்ட ராகம் போட்டே பாடினான். அந்த ஐவரும் லேசாய் உடம்பைக் குலுக்கி, லயித்துப் போனார்கள். பிள்ளைக்காரி கணவனைக் கண்குத்திப் பார்த்தாள். கிராமத்து மஞ்சளை, டில்லி பவுடர் இன்னும் துரத்தவில்லை. வாயில் புடவைக்குள் ஒரு வடிவழகு. அவனிடம் செல்லமும் சிணுங்கலுமாய்க் கேட்டாள்.

‘அடிப்பாவிங்க... இந்த மாதிரி பாட்டா பாடுறாள்கள். நல்லவேளை எனக்கு இன்னும் இந்தி வரலப்பா! எனக்கு ஒரு மாசம்னு எப்படிக் கண்டாளுங்க! எல்லாம் ஒங்களால!”

“ஓங்க அப்பாவாவது சும்மா இருந்திருக்கலாமே.”

“ஏனுங்க... எங்கம்மா உண்டாயிருக்கதும் இதுகளுக்கு எப்படித் தெரியும்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/279&oldid=1250412" இலிருந்து மீள்விக்கப்பட்டது