பக்கம்:வாடா மல்லி.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 259


நிசப் பெண்டாட்டியான பிள்ளைக்காரி என்ன இது. சொகமா இருக்குதோ என்று எரிந்தாள். இதற்குள், இரண்டுபேர் அவன் இரண்டு பைக்குள்ளும் கையை விட்டார்கள். ஒரு கை, கைக்குட்டையோடும், இன்னொரு }& ஒரு பெண்ணின் புகைப்படத்தோடும் வெளிப்பட்டன. வீட்டுக்காரி அழுகைக் குரலில் கத்தினாள்.

“என்னை என் வீட்ல கொண்டு போய் விட்டுடுங்க. அப்பவே ஊர்ல் ஒங்களப்பத்தி ஒரு மாதிரிச் சொன்னாங்க.”

“நான் ஒருமாதிரி புருஷன் இல்ல. ஒரு மாதிரி’ புருஷன். இந்த போட்டோ ஒரு டாலண்டோட படம். நல்லா பாரு.. அசல் கிழவி. அறுவது வயசு, என்ன சுலோச்சனா, இவளுக முன்ன வச்ச.”

சுலோச்சனா, அந்தப் படத்தை உற்றுப் பார்த்தாள். குமரிமாதிரி மேக்கப் செய்த கிழவிதான். இதற்குள், தொட்டிலுக்குள் 68D 556D Ld விட்டு இரண்டுபேர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியேறினார்கள். அதைப் பார்த்த சுயம்புவுக்கு அண்ணன் குழந்தையை அதே பிராயத்தில் பார்த்த நினைப்பு; வெளியே போய் அந்தக் குழந்தையை வைத்திருந்த ஒல்லிக்காரியடமிருந்து, அதை வாங்கிக்கொண்டான். உள்ளே, தாய்க்காரியிடம் கொடுக்கப் போனான். உடனே அந்த இருவரும் தொழில் ரகசியம் தெரியாதவனைக் காதைப் பிடித்து செல்லமாக முறுக்கிவிட்டு, குழந்தையைப் பலவந்தமாக வாங்கிக் கொண்டார்கள். சுலோச்சனா, வாசலுக்கு வந்து கத்தினாள்.

“அய்யோ.. என் குழந்தை. ஏங்க, ஒங்களைத்தான். எவ்வளவு பணம் கொடுத்தாவது குழந்தையை வாங்குங்க! இவ்வளவு சம்பளம் வாங்கிட்டு. அஞ்சு ரூபா கொடுத்தால் எப்படி? அந்த ராட்சசி என்ன சொல்றாள்:”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/281&oldid=1250430" இலிருந்து மீள்விக்கப்பட்டது