பக்கம்:வாடா மல்லி.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 261


குழந்தைக்கு ஒரு ஜட்டி போடு. பால் வராமல் இருக்க மாத்திரை சாப்பிடாதே! தாய்ப்பாலு தாய்ப்பாலுதான்! புட்டிப்பாலு எங்கள மாதிரி. பிரயோசனப்படாது. போயிட்டு வாறோம். அடுத்த பிள்ளைக்கு இருநூறு ரூபாய். அதுக்குள்ள விலைவாசி மூணு மடங்கா ஆயிடுமே. வயித்துப் பிள்ளய அபார்ஷன் செய்யாதே! புருஷனை அனுசரிச்சுப் போ! அச்சா ஆத்மி, நல்ல யங்மென்.”

“ஓங்க வார்த்தையே ஒங்கள காட்டிக் கொடுத்திட்டு பாருங்க! இந்த ஆட்களுக்கு இதெல்லாம் தெரியுமா என்ன ?”

“நெசமாவே கடைசி வரிதான் என்னுது. மீதி அவளே சொன்னது.”

‘ஏதோ இன்னும் கேக்கறாளுங்க... பணம் போதலியா?”

“எங்கே வேலைன்னு கேக்காங்க..”

இப்போது, சுலோச்சனாவே பிள்ளையை மார்போடு சேர்த்துக் குலுக்கியபடியே தூர்தர்ஷன், டெலிவிஷன் என்று பெருமையாய்ச் சொன்னாள்.

தலைகளில் கைகளை வைத்து சலாம் போட்டு வெளியேறப் போன அந்த ஐவரும், அந்த அறையை நெருங்கி வந்து அவனைச் சுற்றி நெருக்கினார்கள். டோலக் குரலெழுப்பியது. புல்புல்தாரா நாதமெழுப்பியது. கொலுசுக்கால்கள் தாளமிட்டன. பாடகி ஜாக்கெட்டுக்குள் திணித்த ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து அவன் பைக்குள் திணித்துவிட்டு, “பாய்சாப்.ஹமே டி.வி.மே. தி காதோ. சம்திங் தே. ஹேங்கே இஸ் பச்சாஜ் ரூபியாகோ அட்வான்ஸ். மே. லேலோஜி.

சுலோச்சனா, கணவனைக் குழப்பத்தோடு பார்த்தபோது அவன் விளக்கினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/283&oldid=1250448" இலிருந்து மீள்விக்கப்பட்டது