பக்கம்:வாடா மல்லி.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 சு. சமுத்திரம்


“டெலிவிஷன்ல இவங்க முகத்தை எப்படியாவது காட்டிடணுமாம். இந்த ரூபாய லஞ்சமா வச்சுக்கணுமாம். இன்னும் எவ்வளவு பணம் கேட்டாலும் தருவாங்களாம்!”

‘உங்க டெலிவிஷனை நல்லா தெரிஞ்சு வச்சிருக்குதுங்களே. சரி சரின்னு தலையாட்டுறீங்களே. ஒங்களால, கொடுத்த வாக்கைக் காப்பாத்த முடியுமா? அப்புறம் இதுங்களுக்கு, எல்லாம் தெரியும்னு சொன்னிங்க. நீங்க டெலிவிஷன்ல இருக்கறது தெரியலை.”

“எல்லாமுன்னா, நீயும் நானும் எப்படிக் கொஞ்சுவோம்னு விஷ-வலாகூட தெரியுமா என்ன... பழைய ஆல் இண்டியா ரேடியோவுல இருக்கிறதா நெனைச் சிருக்கலாம்.”

இப்போது, சுலோச்சனாவே அவர்களிடம் தமிழில் பேசி, அதற்கு ஏற்ப சைகை செய்தாள்.

“இவரு நான் கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டாரு... எப்படியாவது ஒங்க முகத்தை டி.வி.யில காட்ட வைக்கேன். டோண்ட் ஒர்ரி. நானாச்சு, ஏங்க, அந்த ஐம்பது ரூபாயை அப்படியே வச்சுக்குங்க. சொன்னா பொறுக்கமாட்டீங்களே. வெளையாட்டுக்குச் சொன்னா அப்படியே வச்சுக்கிட்டீங்களே.”

அவர்களுக்கும் புரிந்தது. தலைகளைத் தரைதட்டும் படி சலாம் போட்டுவிட்டு அவன் திருப்பிக் கொடுத்த ஐம்பது ரூபாயை வாங்கிக்கொண்டு, திரும்பப் போனார்கள். சுலோச்சனா, புருஷனின் கைக்கடி காரத்தைப் பிடித்தபடியே கண்கள் சொருகக் கேட்டாள்.

“ஏங்க இந்த பச்சை லுங்கிக்காரப் பையன். என் தம்பி மாதிரியே அசப்புல இருக்கான் பாருங்க. யாரு பெத்த பிள்ளையோ... ஒருவேளை தமிழ்நாடா இருக்குமோ...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/284&oldid=1250464" இலிருந்து மீள்விக்கப்பட்டது