பக்கம்:வாடா மல்லி.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 263


“தம்பி ஒன் பேரு என்னப்பா...”

சுயம்பு இரண்டு கைகளையும் விரித்துக் காட்டினான். அவர்களும் அவனைத் தமிழ்நாட்டின் சாயல் கொண்ட பீஹார்க்காரன் என்பதுபோல் நினைத்துவிட்டார்கள். சுயம்பு பெருமினான். நான் கெட்ட கேட்டுக்கு பேச்சு ஒரு கேடா...’

அந்த ஐவரும் அவனைப் பிடித்து இழுத்தார்கள். அவனுக்கு அந்த சுலோச்சனா வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பது மாதிரி ஒரு ஆசை! அவசரப்பட்டு சைகை செய்துவிட்டோமே என்று வருத்தம். இதற்குமேல் பேசினால், அசிங்கம் என்று சுயமரியாதைத் தனம். அவர்கள் இழுத்த இழுப்புக்கு அவன் நடந்தான். அவர்கள் அவனைச் சுற்றிக் கூத்தாடாத குறையாகக் கூட்டிப் போனார்கள். ஒருத்தி, அவன் தலைத்துாசியைத் தட்டிவிட்டாள். இன்னொருத்தி ‘சாப்பிட்டியா’ என்பதுபோல், வாயில் கை வைத்துக் கேட்டாள். அவனுக்கும் ஒரு தெம்பு. அதே சமயம் இவள்களும் என்ன செய்வார்களோ என்ற அச்சம். சென்னைச் சம்பவம் திரும்பிவிடுமோ என்ற பயம்.

எதிர்த்திசையிலிருந்து இரண்டு சேலை கட்டிகள் வந்தார்கள். சமவயது. ஒருத்தி, கருப்பற்ற - சிவப்பற்ற பொதுநிறம். ஒல்லி. இன்னொருத்தி தடிச்சி. சுயம்புவைச் சுற்றி நின்றவர்களிடம், இந்தியில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த ஏரியாவில் எவனோ ஒருத்தன் விபத்தில் இறந்துட்டானாம். ஒருத்தனுக்கு ஆபீஸ்ல சஸ்பெண்டாம். அழவேண்டிய இடத்திற்கு அழப்போக வேண்டுமாம். அதற்காக ஒரேயடியாய் அழவேண்டியதும் இல்லை என்பதுபோலவும் பேசினாள். ஒரு பஞ்சாபிக்கு புதுக் கார் வந்திருக்கிறதாம். விடப்படாதாம்.

அந்த இரண்டு பெண்களும், அன்று தாங்கள் கண்டு பிடித்த வார்டு நடப்புகளை மாற்றி மாற்றி விளக்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/285&oldid=1250466" இலிருந்து மீள்விக்கப்பட்டது