பக்கம்:வாடா மல்லி.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 சு. சமுத்திரம்


கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒல்லிக்காரி, சுயம்புவின் தோளில் கை போட்டாள். பாடகி நீலிமா விவரம் சொன்னபோது தடித்தவள் சுயம்புவிடம் கேட்டாள்.

“நீ தமிழா.” சுயம்பு, வெறுமனே தலையாட்டவில்லை. ஆமாம் என்று ஒவ்வொரு எழுத்தையும் தனிப்படுத்தியும் ஒன்றுபடுத்தியும் பதிலளித்து, அவளை நெருங்கியடித்தான். அவள் அவனை இடுப்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். பிறகு அவன் மோவாயை நிமிர்த்தியபடி, ஆனந்தமாய்க் கூவினாள்.

“எப்பாடி எனக்கு மகள் கெடச்சிட்டாள். இனிக் கவலையே இல்ல.”

அவள் சுயம்பு தோளில் கையை அழுத்தமாகப் போட்டபோது, ஒல்லிக்காரி அந்தக் கையை எடுத்துக் கீழே போட்டாள். இருவரும் மலையாளத்திலும், தமிழிலும் மோதிக்கொண்டார்கள்.

“நீ அல்லே ரெண்டு மக்களே. தத்து எடுத்தது.” ‘ரெண்டு முண்டைகளும் மெட்ராசு குப்பத்துக்கு பழையபடி ஒடிட்டாள்களே.”

“நீ தொட்டது ஏதும் சரியாவ்லியா. நண்ட முகராசி அவ்வன என்ன. ஞான். இவ்ளே. தத்தெடுக்கன.”

இதற்குள் தலைப்பாட்டுக்காரியான நீலிமா, டோலக்கை ஒரு தட்டுத் தட்டி, ஒருத்தி கையை எடுத்து இன்னொருத்தி வாயிலும் இன்னொருத்தி கையை எடுத்து அடுத்தவள் வாயிலும் வைத்து அடைத்தாள். சுயம்பு குழம்பிப் போய் நின்றான். அவனுக்கு எவளுக்கும் மகளாக ஆசையில்லை. பட்டது போதும்.

அடுத்த எட்டு பேரும், ஒரு சந்தைத் தாண்டி, திறந்த வெளி மைதானத்தைக் கடந்து மூன்று மாடிக் கட்டிடக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/286&oldid=1250483" இலிருந்து மீள்விக்கப்பட்டது