பக்கம்:வாடா மல்லி.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 265


குவியல்களை நோக்கிப் போனார்கள். சின்னச் சின்ன அறைகள்தான். அரசாங்கக் குடியிருப்புகள். அன்னை இந்திரா, இந்தப் பிறவிகளுக்கும், அங்கே இடம் ஒதுக்கியிருந்தார். அவருக்கு, இவர்களிடம் இருந்த அன்பைப் போல், இன்னும் ஈரம் உலராத சுவர்கள்.

அந்த மாடிக் கட்டிடங்களுக்கு ஒரு ஒரமாக தனித்திருந்த ஒரு சின்ன வீடு. அந்த வீட்டுக்கு வெளியே ஒரு ஆலமரம். அதைச் சுற்றி ஒரு வட்டச் சுவர். அதன் அடிவாரத்திலும் கோழியாசனம் கொண்ட முர்கேமாதா. ஒரு டப்பா நிறைய விபூதி, இன்னொன்றில் குங்குமம்.

அந்த ஆலமரத்தடியில் இருந்தவளை, இவர்கள் எல்லோரும் பயபக்தியோடு பார்த்தார்கள். அவர்களின் குரு அலி கங்காதேவி. ஐம்பது வயதிருக்கும். பின்பக்க முடி மூன்று சடைகளாகத் தொங்கின. அரிசிப் பற்கள். ஊசியை வைத்து அங்குமிங்குமாய்க் குத்தியது மாதிரியான முகம். பவுன் மாதிரிமான நிறம்.

பாடகி நீலிமா, சுயம்பு கிடைத்த விவரத்தை விளக்கினாள். அந்த இருவரும் சொல்லாதே என்று அவளை ஜாடைமாடையாக இடித்தாலும், அவள் இவர்களுக்குள் நடந்துகொண்டே நடந்த சுவீகார’ விவகாரத்தையும் விளக்கினாள்.

கங்காதேவி சுயம்புவைத் தன்பக்கம் வரவழைத்தாள். விபூதியிட்டு, குங்குமம் வைத்தாள். இந்தியில் நதி கடலுக்கு எப்படி வரனுமோ அப்படி வந்திட்டே... கவலைப்படாதே. இனிமேல் உன் வாழ்வும் தாழ்வும் எங்களோடு என்றாள். அதை அந்த இரண்டு பேரும் தமிழிலும் மலையாளத்திலும் போட்டி போட்டு விளக்கினார்கள்.

கங்காதேவி, தீர்மானமாகச் சொன்னாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/287&oldid=1250490" இலிருந்து மீள்விக்கப்பட்டது