பக்கம்:வாடா மல்லி.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 சு. சமுத்திரம்


“மொதல்ல இதை, ‘இவளாக்கணும்’... முழுப் பெண்ணாக்கணும். அந்தச் செலவுக்கு யார் மொதல்ல பணம் கொடுக்காங்களோ, அப்போது யாருக்கு மகள்னு யோசிக்கலாம்.”

30

சுயம்பு, தன்பிறப்பைத் தானே கண்டவன்போல் - இந்தப் பிறவியிலேயே நிர்வாணம் பெற்றவன்போல் தெளிவடைந்தான்.

இந்த ஒரு மாத காலத்தில் அவர்களின் பெய்ர்களைச் சொல்லுமளவிற்கும் ஒட்டை உடைசல் இந்தியில் பேசும் அளவிற்கும் முன்னேறிவிட்டான். நீலிமா. நசிமா... மாக்கிரெட். லட்சுமி. பகுச்சார்தேவி. குஞ்சம்மா..

அது, சுமாரான அறை. நான்கு கட்டில்கள். கயிற்றுக் கட்டில்கள் ஆனாலும் அவற்றுக்கு மேலே மெத்தை. குளிர் காலத்தில் மூடிக்கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் ரசாய் மெத்தை. இதுவரை ஒண்டிக்கட்டிலில் குடித்தனம் செய்த சுயம்புவுக்கும், ஒரு சொந்தக் கட்டில் கிடைத்தது.

ஒல்லிக்காரியான மலையாளத்தா குஞ்சம்மா எப்போதோ பிசைந்து வைத்த சப்பாத்தி மாவை இப்போது சலவைக்கல் மாதிரியான வட்டக்கல்லில் உருட்டிக் கொண்டிருந்தாள். அடுப்பில் சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டப்பட்ட உருளைக் கிழங்குகளை தமிழ்காரி லட்சுமி பொரித்துக் கொண்டிருந்தாள். வேக வைக்காமலேயே அப்படியே பொறிக்கப்படும் அவசர சப்ஜி, இன்று குஞ்சம்மாவின் சமையல் முறை. அவளுக்கு அவசர சப்ஜி செய்யத் தெரியாது என்ற அனுமானத்தில், லட்சுமி ஒத்தாசை செய்தாள். பாடகி நீலிமா, தனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/288&oldid=1250505" இலிருந்து மீள்விக்கப்பட்டது