பக்கம்:வாடா மல்லி.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 269


குடியிருப்புப் பக்கம் ஒரு பளபளப்பான கார், உள்ளே நுழைந்ததும் ஒன்று ஏறிய சுவடு தெரியாமலே அந்தக் காரில் கம்பீரமாகப் போய் உட்கார்ந்து, காரைப் பறக்க வைத்தது. இன்னொன்று’, மோட்டார் பைக்கில் ஏறிவிட்டது. சில வீடுகளுக்கு முன்னால், சைக்கிள்களும், ‘டபுளாகப் போய்க் கொண்டிருந்தன. அந்த வளாகத்தின் மத்தியில் உள்ள பொது மண்டபத்தில் ஒரே கூத்து. கவாலிப் பாடல்கள். சிரிப்பும் கும்மாளமுமான இரு பிரிவின் லாவணிப் பாடல்கள். அதைப் பார்க்கும் கூட்டத்தில் கலகலப்பான சலசலப்பு.

ஹறியா. கீத்கே... ஒன்ஸ்மோர். ஆலமரத்தடியில் சில கார்கள். காரில் வந்தவர்கள்கூட, கீழிறங்கி குரு அலியான கங்காதேவியின் காலைத் தொடுகிறார்கள். அவர், ஒரு 4fr5tr, இவர்கள் பக்கமாய் கையாட்ட, அந்தக் கார் வருகிறது. ஒரு ஆஜானுபாகுவான ஜாட். அசல் தேவிலால் தோற்றத்தில் நடுத்தரத் துடிப்பு. ‘சுயம்பு. சுயம்போ. ஹை

சுயம்போ...’

சுயம்பு அந்தக் குடியிருப்புத் திண்ணையிலிருந்து கீழே குதித்து, அந்த ஜாட் மனிதரின் அருகே போகிறான். அவர் ஒரு நூறுரூபாய் நோட்டை எடுத்து அவன் பைக்குள் திணிக்கிறார். முதுகைத் தட்டிக் கொடுக்கிறார். அவன் கையை எடுத்துத் தனது தலைமேல் போட்டு சிறிது நேரம் ஆசீர்வாதமாக வைத்துவிட்டு, நீலிமாவிடம், ஏதோ பேசப் போனார். அதற்குள் சுயம்பு அரைகுறை இந்தியில் ஆங்கிலத்தைத் துணைக்கிழுத்துப் பேசினான்.

“கியா பிதாஜி. ஒய் ஹண்ட்ரட் ரூபி நோட்டு.” அந்தப் பிதாஜி, இந்தியில், உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். ஒரு நிமிடம்வரை, பேசினார்.

சுயம்பு புரியாது விழித்தான். அவனுக்கு அதை விளக்கும்படி, நீலிமா, பாட்டுக் குரலோடு, குஞ்சம்மாவிடம்

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/291&oldid=1250509" இலிருந்து மீள்விக்கப்பட்டது