பக்கம்:வாடா மல்லி.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 சு. சமுத்திரம்


கொஞ்சிப் பேசினாள். உடனே லட்சுமி ஒரு அதட்டு

அதட்டிவிட்டு, தமிழச்சியானாள்.

“நீ மலையாளத்துல பேசி, நான் அதைவேற என்

மகளுக்கு தமிழுல சொல்லனுமோ..!”

‘நீ பரையன தமிழோட, ஞான் பரையன மலையாளம். அவளுக்கு நன்னாய் மன்சிலே. ஆவுண்டு.”

“வாய மூடிக்கிட்டு சும்மா இருடி குஞ்சம்மா... ஏடி சுயம்பு. இந்த பிதாஜி புதுசா நட்டுக்கடை அதான் ஸ்பேர் பார்ட்ஸ் கடை தெறந்தப்போ நீதான கற்பூரம் கொழுத்துனே... இப்போ அந்தக் கடைக்கு என்ன கர்மத்துக்கோ ஒரு ஏஜென்ஸி கிடைச்சிருக்காம். நீ கைராசிக்காரியாம். மெனக்கெட்டு வந்திருக்கார். ஒனக்கு வந்திருக்கிற பவுசப் பாரு. ஒன்ன பெரிய மனுவியாக்குற செலவுக்கு இவளும் நானும் போட்டி போட்டு சம்பாதிக்கோம். நீ என்னடான்னால், எங்களவிட ரெண்டு மடங்கா சம்பாதிக்கே. பேசாம எங்கள தத்து எடுத்துக்கடி..”

சுயம்பு அந்த நூறு ரூபாய் நோட்டை யாரிடம் கொடுக்கலாமென்று யோசித்தான். தமிழின் இனமானமும், மலையாளத்தின் திராவிட சக்தியும், அவனை இழுக்கடித்தன. பிறகு தேசியவாதியாகி, நீலிமாவிடம் நீட்டினான். அவளோ, அந்த நோட்டை மீண்டும் அவன் ஜாக்கெட்டுக்குள் திணித்தாள். இதற்குள் ஆஷா அங்கே ஓடிவந்தாள். மராத்திக்காரி - துப்பறிவதுதான் அவள் வேலை. அந்த சுயம்புவைப் பார்த்து முதல் குரல் கொடுத்தவளும் இவளே. மராத்தி வாடையில் சுயம்போ, சுயம்பு’ என்றாள். சுயம்பு அவளை சிநேகிதமாய்ப் பார்த்துச் சிரித்தபோது, அவள் லட்சுமியிடம் காது வழியாகச் சொல்ல, அவள், அதை, வாய் வழியாக விட்டாள். காதுக்கும் வாய்க்கும் இடையே ஒரு மொழி மாற்றம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/292&oldid=1250510" இலிருந்து மீள்விக்கப்பட்டது