பக்கம்:வாடா மல்லி.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 273


வாரம் கொடுத்தார். வெட்டு, வெத்து வேட்டாயிட்டு. பேசாமல், அதை வாங்கிக் கொடுங்கக்கா.”

“எங்கே கிடைக்கும் தெரியாதே!” “எனக்குத் தெரியும். பூசா ரோட்டுல ஒரு ஆயுர்வேத ஆஸ்பத்திரி இருக்கு ஒரு நொடியில போயிட்டு வாறேன்.” சுயம்பு பகுச்சார்தேவியிடம் தும் இதர் பைட்டியே’ என்று சொல்லிவிட்டு ஒரு ஆட்டோவைக் கை தட்டிக் கூப்பிட்டான். அது வந்ததும் ஒரே தாவல்.

பகுச்சார்தேவி, அந்தக் குழந்தையின் தலையைப் பிடித்து முர்கேவாலி தேவியை அந்த ‘அச்சா பச்சாவுக்காக’ தியானித்தாள். சுலோச்சனாவின் முதுகைத் தட்டி குச் நை. குச் நை’ என்றாள். அதாவது கவலைப்படும்படி ஒன்றும் இல்லையாம்.

இதற்குள், சுயம்புவும் திரும்பி வந்துவிட்டான். ஒரு கையில் தேன் பாட்டில். மறு கையில் பத்து மாத்திரை பொட்டலம். ஒரு மாத்திரையைக் கையாலேயே நசுக்கி தூளாக்கி உள்ளங்கையில் ஏந்தி தேனில் குழைத்து, ஆள் காட்டி விரலில் தேய்த்து, குழந்தையின் வாயில் வைத்தான். தாய்க்காரி பதறியபோது, இந்த மருந்து நல்லது செய்யும், அப்படி செய்யாட்டாலும், கெட்டது செய்யாது. மூணு வேளைக்குக் கொடுக்கா என்றான். “எவ்வளவு ரூபாப்பா?” “ஒங்களுக்கு ஏன் அதெல்லாம்!” “முன்னப் பின்ன தெரியாத எனக்கு.” “நீங்க எனக்கு அக்காமாதிரி இருக்கீங்க. அது எங்க அண்ணன் குழந்தை மாதிரி இருக்குது. அப்படி நீங்க இல்லாவிட்டாலும் என்ன, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவப்படாதா? நான் வாறேன். மாத்திரை அவ்வளவுதான் இருந்தது. தீர்ந்துபோனதும், ஸ்டாக்குக்கு வந்துடும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/295&oldid=1250514" இலிருந்து மீள்விக்கப்பட்டது