பக்கம்:வாடா மல்லி.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 சு. சமுத்திரம்


“ஒனக்கு எந்த ஊருப்பா?” “ஊரைச் சொன்னாலும் பேரச் சொல்லப் படாதுன்னு சொல்லுவாங்க! ஆனால், நான் ரெண்டுமே சொல்லப்படாது! படிச்சது காலேஜ், இனிமேல் ஆடப்போறது தெரு டான்ஸ்! ஏக்கா அழுவுறே... குழந்தைக்கு ஒன்னும் ஆகாதுக்கா.”

“நான் கொழந்தைக்காக அழலப்பா. நீயும் என் தம்பி மாதிரி. ஒன் கோலத்தை நெனச்சால், ஒனக்கு நான் ஏதாவது செய்யனும் தம்பி!”

“அப்படின்னா, இந்தத் தங்கச்சிக்கு ஒரே ஒரு உதவி செய் ஒங்க ஹஸ்பெண்ட எங்க ஆட்களை படம் பிடிச்சு டி.வி.யில் காட்டச் சொல்லு. அட்ரஸ் வேணுமா? பகுச்சார். டி.வி. கம்மிங். தும் அட்ரஸ் போலோ.”

பகுச்சார்தேவி முகவரி சொல்ல, சுலோச்சனா எழுதிக்கொண்டாள். சுயம்பு தானிருக்கும் இடத்தைக் கைநீட்டி விளக்கிவிட்டு, புறப்பட்டுவிட்டான்.

32

மறுநாள் காலையில், எல்லோருக்கும் முன்னாலேயே குளித்துவிட்டு, ஆலமரத்தடி கங்காதேவியின் காலைத் தொட்டுக் கும்பிட்டு, வீட்டுக்கு ஓடிவரப் போனான் சுயம்பு. இன்றைய சமையல் அவன் முறை. அப்போது ஒரு மாருதி ஜீப் குறுக்கே நின்றது. அதன் முன்பக்கம் இருந்து குதித்தவன், இஎன்ஜி காமிராவை சரிபார்த்துக் கொண்டிருந்தான். பேச்சையும் பேசிய உருவத்தையும் ஒரே சமயம் பதிவு செய்யும் காமிரா. அந்தக் குழுவின் தலைவரைப்போல் தோன்றிய சுலோச்சனாவின் கணவன் சுயம்புவை அடையாளம் கண்டுகொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/296&oldid=1250515" இலிருந்து மீள்விக்கப்பட்டது