பக்கம்:வாடா மல்லி.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 சு. சமுத்திரம்


“அலிகள் மனித குலத்தின் மூன்றாவது பரிமாணம். பீஷ்மர் மரணத்திற்குக் காரணமான சிகண்டி ஒரு அலி. அர்ஜுனன் அலியின் உருவத்தோடு இருக்கும் போதுதான், கெளரவப்படைகளை தன்னந்தனியாய் தோற்கடித்தான். கடவுள், ஆண் வடிவாகவோ அல்லது பெண் வடிவாகவோ பாரபட்சமாய் இருக்க முடியாது. அலி வடிவத்தில்தான் இருக்க வேண்டும். அலிகள், நம்பிக்கைக்கு உரியவர்கள். அந்தக் காலத்து அந்தப்புர காவலர்கள். ஆனால், இந்த ஆண்களும் பெண்களும். அவர்கள் செய்யும் அயோக்கியத் தனங்களும்.”

“குருஜி மேடம். விவாத் தையே. கான்ஸன்ட்ரேட் ஆன் யுவர் பிராப்ளம்.”

கங்காதேவி, இணங்கினாள். இந்தச் சின்னத் தடங்கலோடு, ஒரே டேக்கில் எல்லாம் முடிந்தது. பிறகு அந்த டி.வி. குழு லேண்ட் மார்க் - பனோரமா ஷாட்” என்ற புதிய டி.வி. மந்திரங்களை உச்சரித்தபடியே, அங்குமிங்குமாய் சுழன்றது. சுயம்புவும் ஒரு ஸ்டேட் மெண்ட் கொடுத்தான். இப்போதுதான், தனக்குத்தானே ஒரு சமாதானம் ஏற்பட்டிருக்கிறது என்றும், அவன் தமிழ் மொழியிலேயே சொன்னான். சில சராசரி மனிதர்களிடமும், ஸ்டேட்மெண்ட் வாங்கப்பட்டது. நீலிமா குழு, இதுவரைக்கும் பாடாத பாட்டாய்ப் பாடி, ஆடாத ஆட்டம் ஆடி, ஒரு அமர்க்களம் செய்துவிட்டது.

அந்த காமிராக்குழு, நல்ல உபசரிப்போடு போனதும், எல்லோருக்குமே ஒரு எதிர்பார்ப்பு. அன்றைக்கே சாயங்காலம் ஏழு மணிக்கு போடப்போவதாக, சுலோச்சனா புருஷன் சொல்லிவிட்டுப் போய்விட்டான். இப்போதே இருட்டாதா என்று ஏக்கம். கூடவே இருட்டடிப்புச் செய்துவிடுவார்களோ என்று ஒரு பயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/298&oldid=1250533" இலிருந்து மீள்விக்கப்பட்டது