பக்கம்:வாடா மல்லி.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 277


கங்காதேவி, அந்தப் பெருநகரில் உள்ள, குரு அலிகளுக்கும், சேதி சொல்லிவிட்டாள். சுலோச்சனா கணவன், தலையிட்ட பிறகு, அவருடைய பேச்சு, உணர்வு வெளிப்பாட்டிலிருந்து, அறிவு வெளிப்பாட்டிற்கு வந்தது. பக்கத்து நகரங்களுக்கு எஸ்டிடி முலம் இந்தச் செய்தியை அவரே தெரியப்படுத்தினார். பிரதமர் இந்திரா காந்தியும் தான் பேசுவதைக் கேட்பார் என்று சந்தோஷம்.

அந்த வளாகத்தில் ஏழு மணிக்கே கண்கொள்ளாக் கூட்டம். சராசரிகளும் அலிக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். பல்வேறு அலிப்பேட்டைகளிலிருந்து ஆட்கள் குவிந்தனர். நீலிமாவுக்கு இன்னும் கொஞ்சம் நன்றாக டிரஸ் செய்திருக்கலாம் என்று ஒரு பின்புத்தி’. கங்காதேவி வீட்டுக்குள்ளிருந்த டி.வி. செட்டை ஆலமரத்தடித் திட்டில் வைத்துவிட்டாள். சரியாக ஏழு மணி முப்பத்தாறு நிமிடம். அறிவிப்புப் பெண்ணை அடித்துப் போட்டுவிடலாமா என்ற கோபம். அந்தக் கோபம் தீர்வதற்குள்ளேயே.

பனித்துளியில் பனைமரத்தைப் பார்ப்பதுபோல், அந்தச் சின்னத் திரையில் அந்த ஏரியாவை நிரூபிக்கும் லேண்ட் மார்க் ஷாட். கங்கம்மாவின் பேச்சு... இடையிடையே பீஷ்மர், சிகண்டி, அர்ச்சுனன். மாலிக்காபூர் ஆகியோரின் படங்கள். அப்புறம் நீலிமா கோஷ்டியின் ராகம் தானம் பல்லவி, அலிகளைப் பற்றிய சராசரிகளின் உயர்வான கருத்துக்கள். சுயம்புவின் தமிழ்க்குரல். அவன் பேசியதை அடக்கி, அதன்மேல் சத்தம் போட்டு ஒலித்த, இந்தி ஒவர்லாப்... இறுதியில், கங்கம்மாவின் வேண்டுகோள். கடைசியாக “இவர்களும் - நம்மவர்கள் - நல்லவர்கள்” என்ற டைட்டில், நீலிமா, தன்னைப் பாராட்டியே, தனக்குத்தானே கைதட்டினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/299&oldid=1250535" இலிருந்து மீள்விக்கப்பட்டது