பக்கம்:வாடா மல்லி.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 சு. சமுத்திரம்


நசிமாவுக்கு குளோசப்பில் வரவில்லை என்று ஒரு கவலை. குஞ்சம்மா, லட்சுமியோடு சண்டைபோடுவது டி.வி. யிலும் காட்டப்பட்டது. சுயம்பு தனது கதையைச் சொன்னது கண்ணிரை வரவழைத்தது.

கங்காதேவி சுயம்புவைத் தன் பக்கம் வரவழைத்து கட்டியணைத்தாள். ஒரு நாளிலேயே தன்னை ஊரறிய உலகறிய செய்துவிட்டதற்காக அவனை அந்த டி.வி. யைப் பார்த்தது போலவே பார்த்தாள். பிறகு திட்டவட்டமாக அறிவித்தாள்.

“இன்று முதல், இவள் என்மகள். இதுக்கான சடங்கு சீக்கிரம் நடக்கும். அதுக்கு முன்னால பூப்பு நீராட்டு, சுவீகார சடங்கு, நாற்பது நாளுக்கு மேல்தான் நடக்கப் போகுது. ஆனாலும் இப்பவே சொல்லிட்டேன். அடுத்த சித்ரா பெளர்ணமியில பெண் சடங்க வச்சுக்கப் போறேன்! அப்புறம் அலி பட்டாபிஷேகம்...”

ஒரே கும்மாளம். ஒரே நீளவாக்கு கைதட்டல். கங்காதேவியை, மனதுக்குள் திட்டிய லட்சுமியும் குஞ்சம்மாவும், பிறகு ஒருவரை ஒருவர் பார்த்து சந்தோஷப்பட்டார்கள். சுயம்பு அவளுக்குக் கிடைக்கல என்று இவளும், இவளுக்குக் கிடைக்கலைன்னு அவளும், தங்களுக்குள் ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தி, அதில் ஏமாற்றத்தைத் தேய்மானமாக்கினார்கள்.

சுயம்பு, லட்சுமியிடம் கேட்டான். ஒட்டுக் கேட்க வந்த குஞ்சம்மாவையும் பார்த்துக் கேட்டான். “பெண் சடங்குன்னா என்னது.”

“அதுவா ? , ஒனக்கு தெரிய வேண்டாம். சொன்னாலே மயக்கம் போட்டு விழுந்துடுவே..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/300&oldid=1250538" இலிருந்து மீள்விக்கப்பட்டது