பக்கம்:வாடா மல்லி.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 சு. சமுத்திரம்


சுயம்புவின் பாதங்களுக்குச் சிறிது பின்புறமாய், விபூதி குங்குமம் வைக்கப்பட்ட ஒரு புது மண்பானை. விழுவதை விழுங்குவதற்கு வாய் பிளந்து காத்திருந்தது.

அந்த அறையின் ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. உள்ளேயும் ஒரு வட்டமான சித்ரா பெளர்ணமி மின் விளக்கு... எதிர்ச்சுவர்ப் பக்கம் முர்கேவாலி மாதா, சேவல் மேல் சரிந்து நின்றாள். இவனையே பார்க்கும் உக்ரப் பார்வை. இவனுக்குக் குறி வைத்தது போன்ற திரிசூலம். பழவகைப் படைப்புக்கள். ஊதுபத்திகள், மேகமண்டலத்தை உற்பத்தி செய்தன. எல்லோரும், சுவர்க்கடிகாரத்தையே பார்த்தார்கள். அது நள்ளிரவு பன்னிரண்டு மணியைக் காட்டி அடிப்பதற்கு, இன்னும் நூறு தடவை சொடக்குப்போட்டு விடலாம்.

சுயம்புவால் விம்மத்தான் முடிந்தது. மனம் விட்டுத் தேம்பி, வாய்விட்டு அழ முடியவில்லை. டி.வி. காரர்கள் போன மறுநாளே, அவன் குரு அலி கங்காதேவிக்கு நிச்சயிக்கப்பட்ட மகளாக அவள் வீட்டுக்கே, சுயம்பு வந்துவிட்டான். இல்லை, வரவழைக்கப்பட்டான். மயில் இறகில் செய்தது மாதிரியான கட்டில் படுக்கை. தனித்த அறை. மின்விசிறி. வேளா வேளைக்கு, பிரியாணி முதல் பிரிஞ்சி வரை கொடுக்கப்பட்டது. ஆனாலும், அது ஒரு உயர் ரக சிறைவாசம். அவனுக்குப் பழக்கப்பட்ட எந்த அலியும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஆனால், கங்காதேவி அவ்வப்போது வருவாள். இவனிடம், தனக்குத் தெரிந்த பல மொழிகளிலும் சில வார்த்தைகளை உருட்டிப் போட்டு ஒருவிதப் புது மொழியில் பேசுவாள். ஆனாலும், அந்தப் பேச்சு செய்யாத காரியத்தை அவரது செல்லமான முதுகுத் தட்டும், கன்ன வருடலும் செய்துவிட்டன. இடையிடையே ‘மகளே. நீ இப்போ இருப்பது மாதிரி, பலர் இருந்தாலும், நீ என்னுடைய மகள் என்பதாலும், எனக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/302&oldid=1250847" இலிருந்து மீள்விக்கப்பட்டது