பக்கம்:வாடா மல்லி.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 287


மயான அமைதி. ஒவ்வொருவரும் இயற்கை கொடுத்த சுமையை மேலும் கனமாக்கிய பெற்றேரையும் மற்றோரையும் நினைத்துப் பார்த்தார்கள். மனத்தைப் பின் நோக்கி நகர்த்தினார்கள். அந்த வைத்திய அலிகள்கூட, அந்த மயானப் பார்வைக்குக் கட்டுப்பட்டது போல் சிறிது இடைவேளையாய் நின்றுவிட்டு, மீண்டும் எண்ணெயையும் வெந்நீரையும் மாறி மாறி ஊற்றினார்கள். சுயம்பு, துக்க உணர்வேடு பார்த்தான். நீலிமாவின் கையை எடுத்துத் தனது கழுத்தில் சுற்றிக்கொண்டான்.

திடீரென்று எல்லோரும் எழுந்தார்கள்.

குரு அலி கங்காதேவி, ஒரு தட்டோடு உள்ளே வந்தாள். அதில் இரண்டே இரண்டு காய்ந்த ரொட்டிகள். இதேமாதிரியான கோலத்தில் அவளைப் பார்த்தறியாத சேலாக்கள் அவள் பக்கம் ஒடிப்போய் அந்தத் தட்டை வாங்கப் போனார்கள். ஆனால், அவளோ ஒரு தலையாட்டு மூலம் அவர்களை நின்ற இடத்திலேயே நிறுத்திவிட்டு, தன்னைப் பார்த்து முகத்தைத் திருப்பிய சுயம்புவைப் பார்த்தே நடந்தாள். அவன் கால்மாட்டுப் பக்கமாக உட்கார்ந்தாள். அவள் பார்த்த பார்வையில் எல்லோரும் வாசலைப் பார்த்தார்கள். சிகிச்சை அலிகளும் காலிப் பாத்திரங்களைக் காட்டிவிட்டு, போய்விட்டார்கள். புறப்படப் போனவர்களில் லட்சுமியின் கையை மட்டும் பிடித்துக்கொண்டு, கங்காதேவி, மற்றவர்களைப் போகும்படி தலையாட்டினாள். சுயம்புவைப் பார்த்துப் பேசப் பேச லட்சுமி, அதைத் தமிழாக்கிக் கொண்டிருந்தாள். மனம் ஒன்றும்போது திறமை தானாய் வெளிப்படும் என்பதற்கு லட்சுமி உதாரணமாகி விட்டாள். குரு அலி மூச்சு வாங்கும்போதெல்லாம், லட்சுமி சுயம்புவுக்குப் பேச்சு வாங்கிக் கொடுத்தாள்.

“சுயம்பு. என்மகளே. என் வயத்துல பிறக்காமல் உன் வாஞ்சையில பிறந்த மகாராணியே. ஒனக்கு என் மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/309&oldid=1250857" இலிருந்து மீள்விக்கப்பட்டது