பக்கம்:வாடா மல்லி.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 சு. சமுத்திரம்


இதுக்குமேல் ஒனக்கு எதுவும் தெரியணுமுன்னா, இந்த லட்சுமி கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோ. நல்லதா சொன்னால், சொல்ல வேண்டாம். கெட்டதாய் சொன்னால், சொல்லு. திருத்திக்கிடறேன்.”

சுயம்பு, பேச்சை அப்படியே நிறுத்திவிட்டு, விக்கித்து நின்ற குரு அலியைப் பார்த்தான். அந்தப் பெரிய தேகத்திற்குள் அத்தனை அணுக்களும் அண்டசராசரமாய்ச் சுற்றுவது போலிருந்தது. அம்மாவைக் கண்டுகொண்டான். லோகமாதா கிடைத்துவிட்டாள். ஊனத்தாய் இல்லையென்றாலும் ஒரு ஞானத்தாய் கிடைத்தது போன்ற உணர்வு. அதற்காக ஆயிரம் உறுப்புக்களையும் ஐயாயிரம் தடவை வெட்டுக்குக் கொடுக்கலாம் என்பது போன்ற வெள்ளப் பிரவாக உணர்வு.

“எம்மா... என்னை ஒங்கிட்ட ஒப்படைச் சிட்டேம்மா...!

34

சுயம்புவுக்கான, முப்பெரும் விழாக்களில், மூன்றாவதும், பெரியதுமான பெருவிழா.

அவனுக்கு அறுவை நடத்திய நாற்பதாவது நாளில் அதே இடத்தில் அலி பட்டாபிஷேக விழா நடைபெற்று விட்டது. அதையடுத்து, அவன் பூப்பெய்ததைக் குறிக்கும் விழாவும் நடந்து முடிந்தது. அவனை ஒப்புக்கு, ஒரு சவுக்குக் கம்பியில் உட்கார வைத்துவிட்டு, அவனே, தானாய் எழுந்திருக்கும்படி விட்டுவிட்டார்கள். இன்று நடப்பது முறைப்படியான சுவீகார விழா. குரு அலியான கங்காதேவி, சுயம்புவை, மகளாக தத்து எடுத்து அலி உலகிற்கு பிரகடனப்படுத்தும் விழா! முன்னைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/312&oldid=1250860" இலிருந்து மீள்விக்கப்பட்டது