பக்கம்:வாடா மல்லி.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 293


அலிகள் சங்கப் பிரமுகர்கள். கங்கம்மாவின் ஆசீர்வாதத்தால் முன்னேறியிருப்பதாக நினைக்கும் ‘சராசரி பணக்கார மனிதர்கள். ஒவ்வொருவர் கரத்திலும் ஏதோ ஒரு பரிசுப் பொருள். பெரும்பாலானவை சேலைகள். சிறுபான்மை மோதிரங்கள்.

அந்த அலி புரோகிதர் கங்காதேவியின் கையைப் பிடித்துக் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு கையாட்டிச் சொன்னார். உடனே, கங்காதேவி, சுயம்புவைப் பிடித்துக் கொண்டு சுற்றுமுற்றும் அலிகளும், நட்பு மனிதர்களும் சூழ முர்கேவாலி மாதாவின் ஆலமரத்தடிக்குப் போனார்கள். நசிமா அங்கிருந்த பால் செம்பை பயபக்தியோடு முர்கே மாதாவின் முன்னால் நகர்த்தி வைத்தாள். இதற்குள், அதே அந்த கசாப்பு அலி, ஒரு பிளேடை எடுத்து, கங்காதேவியின் பெருவிரலில் ஒரு கோடு போட்டது. பிறகு அந்த விரலை எடுத்துப் பால் செம்பின் வாய்ப்பக்கம் பிடித்து அழுத்தியது. ரத்தத்துளிகள் சொட்டுச் சொட்டாய், பாலில் விழுந்தன. உடனே எல்லோரும் ‘முர்கேமாதா, முர்கேவாலி’ என்று கன்னங்களில் தப்பளம் போட்டுக்கொண்டனர். மகளைப்போல், சேலைகட்டியிருந்த சடாமுடி கங்காதேவி, தனது ரத்தம் கலந்த அந்தப் பால் செம்பை எடுத்து, சுயம்புவின் வாயில் ஊற்றினாள். உடனடியாக புரோகித அலி, சுயம்புவின் கையை எடுத்துக் கங்காதேவியின் கரங்களில் ஒப்படைத்தாள். உடனை சேட்டு வீட்டு கல்யாணங்களில் ஈடுபடுத்தப்படும் மேள வரிசைகள் ஆரவாரம் செய்தன. அந்தச் சத்தத்தை அமுக்கும் வகையில் கிளாரினெட் குழாய்கள் உச்சகட்டத்தில் ஓங்காரமிடடன. சுயம்பு தாயின் காலைத் தொட, கங்காதேவி அணைத்துக்கொண்டாள். இருவரும் பின்னர் புரோகிதியின் ஆலோசனைப்படி, மீண்டும் மேடைக்கு வந்தார்கள். ஒன்றுபோல் உட்கார்ந்தார்கள். அப்போது, சுயம்புவுக்கு சென்னையில சேரியின் சேரியில் வாழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/315&oldid=1250863" இலிருந்து மீள்விக்கப்பட்டது