பக்கம்:வாடா மல்லி.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 297


சீர்வரிசைகள் முடியும்போது பந்தியும் துவங்கியது. அதற்காகத் தனிப்பந்தல் போடப்பட்டிருந்தது. நீலிமா வகையறாக்கள் எல்லோரையும் விழுந்து விழுந்து உபசரித்தார்கள். சப்பாத்தி தீர்ந்துபோனதால், வெளியே இருந்து அவசர அவசரமாக அவை கொண்டு வரப்பட்டன. ஆனால் பிரியாணியும், இனிப்பு வகையறாக்களும் அந்தக் குறையைப் போக்கின. அந்த அலிகளின் குடியிருப்புக்களை அடுத்து கவுரவம் பார்த்துக்கொண்டிருக்கும் சிலருக்கும் நீலிமா சிலர் மூலம் சாப்பாட்டு வகையறாக்களைக் கொடுத்தனுப்பினாள்.

கங்காதேவியும், மேகலையும் பந்தல் ஒரம் நின்று எல்லோரையும் வழியனுப்பி வைத்தார்கள். அம்மா அறிமுகப் படுத்தும் ஒவ்வொரு பிரமுகரையும், மேகலை தலைதாழ்த்தி, அங்கீகரித்தாள். பிரமுகர்கள் பேசிப் பேசியே நேரத்தைக் கடத்தினார்கள். கூட்டத்தினரோ, சாப்பிட்ட கை ஈரம் உலரும் முன்னே ஆங்காங்கே, இந்தமாதிரி சந்தர்ப்பங்களில் மட்டுமே பார்க்கக்கூடிய அலிகளோடு பேசிக்கொண்டிருந்தார்கள். எப்படியோ, கூட்டம் எப்படி வருவது தெரியாமல் வந்ததோ, அப்படிப் போவது தெரியாமல் போனது.

35

தாயும், மகளும் வீட்டிற்கு வந்தார்கள். மேகலை, தனது அறைக்குள் நுழையப் போனாள். உடனே கங்காதேவி, அவள் கையைப் பற்றி, செல்லமாக கன்னத்தைக் கிள்ளி, தனது அறைக்குள் கொண்டு வந்தாள். மூவர் புரளக்கூடிய பெரிய கட்டில், மாடத்தில் முர்கேவாலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/319&oldid=1250868" இலிருந்து மீள்விக்கப்பட்டது