பக்கம்:வாடா மல்லி.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 சு. சமுத்திரம்


உட்கார்ந்ததுகூட உங்க மனச நோகடிக்கக்கூடாது என்கிறதாலதான்.”

“உன்னிஷ்டம். ஆனாலும் சொல்ல வேண்டியது என் கடமை, உனக்கும் ஆசாபாசம் உண்டு. ஆம்பளைங்க மேல ஒரு இது வரும். அந்த மாதிரி சமயத்தில், அதோ பார். நான் அடையாளம் காட்டாத மீசைக்காரன். பத்து வருஷத்துக்கு முன்னால ஒரு வாரத்துக்கு ஒரு தடவை இங்க வருவார். அப்புறம் மாரடைப்புல செத்துட்டார். எனக்கும் இப்ப வயசாயிட்டது. அவரோட நினைப்பு கூடிக்கிட்டே இருக்குது. ஆனால் ‘அந்த நெனப்பு’ போயிட்டது.”

‘நானும், உங்ககிட்ட எதையும் ஒளிக்க விரும்பலம்மா. எனக்கும், ஒருத்தர் இருக்கார். ஆனால், என் அளவில தான் இருக்கார். நானும் அவரைக் காதலிக்கேன். அவருக்கு இது தெரியாது. தெரிஞ்சால், ஒருவேளை காறிக்கூடத் துப்புவார். நானும் அவர்கிட்ட தெரியப்படுத்தப் போறதில்ல. காதல் ஒரு வழிப் பாதையா இருந்தாலும் காதல் காதல்தானம்மா.. எங்க இலக்கியத்துல இதைப் பொருந்தாக் காமம் என்று சொல்லுவாங்க.. இருக்கட்டுமே. பொருந்துதோ பொருந்தலியோ. அவரு இருக்கிற இந்த மனசுக்குள்ள... அடுத்தவன் போக முடியாதும்மா.”

கங்காதேவி மகளையே பார்த்தபடி நின்றாள். மனத்திற்குள் வியாபித்த மீசைக்காரன் லேசாய் விலகி, மருமகனைப் பற்றிய ஒரு வடிவக் கோட்டை அந்த மனமே போட்டுக்கொண்டது. இதற்குள் மேகலை, தனது பழைய அறைக்குள் ஒடிப்போய், பழைய சூட்கேஸோடு வந்தாள். துணிகளையும் அங்கேயும் இங்கேயுமாய்ச் சிதற அடித்துவிட்டு ஒரு புகைப்படத்தை நாணிக்கோணியபடி, கங்காதேவியிடம் காட்டினாள். அவள் செல்லமாக அதட்டினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/322&oldid=1250873" இலிருந்து மீள்விக்கப்பட்டது