பக்கம்:வாடா மல்லி.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 301


“இப்படியாடி படத்தை கசக்கி வைக்கிறது. நான் சொல்றேன். சாமுத்திரிகா லட்சணப்படி இவன் நல்லவன். அரவானுக்கு முப்பத்திரண்டு லட்சணங்கள் இருந்தால், இவனுக்கு இருபதாவது தேறும். இவனை நினைத்தால், எவன் நெணைப்புமே வாராது.டி. இதைக் கொஞ்சம் பெரிசு படத்தி பிரேம் போட்டு மாட்டிடலாம். ஒன் மேஜையிலேயே வச்சுக்கோ. அப்புறம் ஒங்க அம்மா அப்பா, அடிக்கடி என்கிட்டச் சொல்வியே அக்கா, அவங்க படம் இருந்தாலும் கொடு. பிரேம் போடுவோம். இந்த வீட்ல இனிமேல் ஒனக்குத்தாண்டி முதல் மரியாதை. நான் முர்கேமாதாவோட ஆலமரத்தடியில் ஒதுங்கப்போற கிழவி...”

மேகலை, மீண்டும் சுயம்புவாகி, பெற்றொரை நினைத்தான். கூடப்பிறந்தவர்களை நினைத்தான். சின்னப் பிள்ளைகளை நினைத்தான். கண்கள் பொங்கின. இதயம் கழண்டுவிடும் போலிருந்தது. பிறகு உடம்பை ஒரு குலுக்கு குலுக்கி, மனத்தை ஒரு நிறுத்து நிறுத்திக் கங்கா தேவியின்

தோளில் சாய்ந்து மேகலையாய் ஒலமிட்டாள். “எல்லாமே நீதாம்மா. நீதாம்மா...”

அப்போது -

சுயம்புவின், கத்தலைப்போல் ஆயிரம் ஆயிரம் கத்தல்கள். வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் அலிகளின் புலம்பல்கள். பலத்த ஒப்பாரி. அங்குமிங்குமான காலடிச் சத்தங்கள். ‘மாதாஜி மாதாஜி என்ற புலம்பல்கள். தாயும், மகளும் வெளியே எட்டிப் பார்த்துப் பரபரத்தார்கள். படபடத்தார்கள்.

தாயும், மகளும், வாயும், வயிறும்கூட வேறில்லாத வர்கள்போல் வெளியே வந்து என்ன, என்ன என்ற ஒரே வார்த்தையை ஒரேசமயம் அடுக்கடுக்காய்க் கேட்டார்கள்.

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/323&oldid=1250874" இலிருந்து மீள்விக்கப்பட்டது