பக்கம்:வாடா மல்லி.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 சு. சமுத்திரம்


அவர்களைக் கண்டதும் அழுது கொண்டிருந்த எல்லா அலி ஜீவன்களும் அங்கே ஓடி வந்தன. கீழே புரண்டவள்களும், வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டவள்களும், தலைவிரி கோலமாக அவர்கள் முன்னால் வந்து நின்றார்கள். எல்லோரும் ஒரே சமயத்தில் சொல்ல முற்பட்டனர். இதனால் வேகமான சுழலில் நீர் மொள்ள முடியாது என்பதுபோல், வாய்க்குள் இருந்து வார்த்தைகளை எடுக்கமுடியாமல், அல்லாடினார்கள். ஒரே ஒருத்தி நீலிமா மாதாஜி இந்திரா மர்கயா. மாதாஜிகோ. பாடிகாட்ஸ். மார்த்தியா...’ என்று அரற்றினாள். அப்போது எல்லா அலிகளும் மீண்டும் ஒரேயடியாய் அழுதார்கள். @60 fr, வளையல்களைத் தலையில் அடித்தே உடைத்தார்கள். நீலிமாதான் சிறிது சமாளித்து ரொக்கே, ரொக்கே’ என்று சொல்லிவிட்டு, கண்ணிரும் கம்பலையுமாய் ஒப்பித்தாள்.

“மாதாஜி. நம்மையெல்லாம் மனுஷஜீவனா மதிச்சு, வீடு கட்டி விளக்கேத்தித் தந்த இந்திராஜியை... அவங்களுக்குக் காவல் காக்கிற போலிஸே சுட்டுக் கொன்னுட்டாங்களாம். அம்மாவை ஆஸ்பத்திரியில பார்த்துட்டு, அலைமோதி வந்தவங்க அழுதுகிட்டே சொல்றாங்க..”

கங்காதேவி, கத்தினாள். அவள் தோரணைக்குப் புறம்பான காட்டுக் கத்தல்.

“இருக்காது. இருக்க முடியாது. எங்கம்மா இந்திராஜி சாகமாட்டாள். அவள்மேல் குண்டு பாய்ந்தாலும், குண்டுதான் சாகும். நம்மோட அம்மா சாகமாட்டாள்.”

கங்காதேவி, ஒப்பாரி போடுகிறவர்களே, அன்னை இந்திரா இறந்துவிட்டதாக தங்கள் ஆசைக்கு ஒரு வெளிப்பாடு செய்கிறார்கள் என்பதுபோல் அவர்களை ஒட்டுமொத்தமாய் கோபத்தோடு பார்த்தாள். ஒரு சிலரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/324&oldid=1250876" இலிருந்து மீள்விக்கப்பட்டது