பக்கம்:வாடா மல்லி.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 305


“என் மாதாவின் காலுல தலையை வெச்சிட்டு வரணும் மகளே. இல்லாட்டால், நான் உயிரோட இருக்கிறதுல அர்த்தமில்லடி. லட்சுமி, ஜாக்கிரதைடி..”

லட்சுமி, மேகலையின் கையை உரிமையோடு பற்றிய போது, கங்காதேவி ஒரு ராணித் தேனி பறப்பதுபோல் நடந்தாள். உடனே, அத்தனை சேலா அலிகளும் அவ்ஸ் பின்னால் நடந்தார்கள். அத்தனைபேரும், அவளைப் போலவே அழுது நடந்தார்கள். ‘மாதாஜி அமர் ஹை.. ஜிந்தாபாத், இந்திரா காந்தி ஜிந்தாபாத்!

36

லட்சுமி மேகலையை வீட்டுக்குள்ளேயே பிடித்து வைத்துக்கொண்டாள். அறைக்கதவைப் பூட்டிவிட்டு, டி.வி. ஸ்விட்சைப் போட்டுப் பார்த்தாள். ஒரு அலை வரிசையல்ல, பல அலை வரிசைகள். லட்சுமி, தொலைக்காட்சியைத் திட்டித் தீர்த்தாள். அந்தப் பெட்டியைக் கையால் குத்தப்போன மேகலையைத் தடுத்துக் கொண்டாள். மேகலைக்கு ஒரே அழுகை. என்னைக்கு அவளுக்கு ஒரு நல்ல நாள் வந்ததோ, அதுவே கெட்டநாளாகும்படி இப்படி நடந்திட்டே. கங்காதேவி அம்மா பொறி கலங்கி போகும்படி ஆயிட்டே...!

மேகலை, லட்சுமியிடம் இதைச் சொல்லிச் சொல்லி மாய்ந்தாள். அவள்தான் ‘மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதடி. எப்படியோ உனக்கு எல்லாம் முடிஞ்சபிறகு இது தெரிஞ்சுதேன்னு ஆறுதல் படுடி..” என்றாள். மேகலை தன்னைப் பற்றி மேற்கொண்டு நினைக்க மறுத்தாள். அன்னை இந்திரா கொலையுண்ட நிகழ்ச்சியைத் தனக்குள்ளேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/327&oldid=1250881" இலிருந்து மீள்விக்கப்பட்டது