பக்கம்:வாடா மல்லி.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 சு. சமுத்திரம்


சுற்றவிடுவது அசிங்கம் என்பதைப் புரிந்து கொண்டவள் போல், லட்சுமியின் தோளில் கைபோட்டு முடங்கிக் கிடந்தாள். ஜன்னலைத் திறந்துவிட்டாள். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சோகமாய் சோகத்தைப் பகிர்ந்து முடங்கிக் கிடந்தனர். குப்புறப் படுத்தும் தூங்கினர். அன்னை இந்திராவின் சோகமும், கடந்த பத்து நாட்களாக பட்ட பாடும் தூக்கமாய் வந்தது. என்றாலும் சிறிது நேரத்தில், பயங்கரமான சத்தங்கள். அவர்கள், ஒரே சமயத்தில் எழுந்தார்கள்.

எங்கும் காரிருள். மின்சாரக் கம்பங்கள், பல்புகள் இல்லாமல் கிடந்தன. அதில் ஒட்டியிருந்த கண்ணாடிச் சிதறல்கள்தான் மின்மினியாய் மின்னின. மற்றெல்லாம் காரிருள், காட்டிருள். மேகலை சுயம்புவாக, மாணவனாக இருந்தபோது, அந்த தார்ச்சலையைப் பிடித்ததே இருள் அதைவிட அதிகப் பிடிப்பான இருள். இருளுக்குப் பின்னே எல்லாம் என்பதுபோல, விதவிதமான சத்தங்கள். எவையோ நொறுக்கப்படுவது போன்ற சத்தம். வெடிப்பது போன்ற சத்தம், வெட்டு மாதிரியான சத்தம். அடிப்பது போன்ற சத்தம், மா, மா’ என்று மருவும் சத்தம். எவையெவையோ கீழே விழுந்து சிதறுவதுபோன்ற சத்தம் முஜே. சோடுதோ. முஜே. பச்சாவோ என்ற சத்தம். சிறுவரும் மகளிரும் கெஞ்சி அழும் சத்தம். அதுவே தானாய் அடங்கி, நிசப்தமாக மாறும்போது, இன்னொரு பகுதியில் இதேமாதிரியான சத்தங்கள். கங்காதேவி விறுவிறுவென்று டோலக்கை சட்டென்று நிறுத்துவாளே, அப்படிப்பட்ட நிசப்தம். மீண்டும் அடிப்பாளே அப்படிப்பட்ட ஒலச் சத்தம். ஜன்னல் வழியாய் எட்டிப்பார்த்தால், ஆங்காங்கே தீப்பந்தங்கள். சாலைகளில் பலரை எரியூட்டுவதற்குப் போதுமான ஜுவாலைகள். அடுக்குமாடிக் குடியிருப்பு களின் கதவுகள் தலையிலடிப்பதுபோல் சாத்தப்படுகின்றன. மனிதர்கள் சிதறி ஓடுகிறார்கள். மனிதர்களை, மனிதர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/328&oldid=1250883" இலிருந்து மீள்விக்கப்பட்டது