பக்கம்:வாடா மல்லி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 11


“இந்தக் கதையே வேண்டாம். அப்பாவிப் பொண்ணுங்க மத்தியில சும்மா உட்காருவது மாதிரி உட்காருறது, அப்புறம் சுயரூபத்தைக் காட்டுறது... மாட்டிக்கிட்டா பைத்தியம் மாதிரி நடிக்கறது. மரியாதையாச் சொல்லு. ஒன் பேரு என்ன?”

“சுயம்பு.”

“இந்தப் பேருக்குரிய அர்த்தம் உனக்குத் தெரியுமாடா அயோக்கியப் பயலே?. எந்த ஊரு? என்ன செய்யுறே?”

“நல்லாம்பட்டி...”

“சீ... எப்படிப்பட்ட பேர்ல இப்படிப்பட்ட பய. எங்கிருந்து வாறடா?”

“எஞ்சினியரிங் காலேஜ்ல படிக்கேன். ஊருக்குப் போறேன்.”

‘எதுக்காகப் போறே?”

“பிடிக்கலே. பிடிக்கலே...”

“வயசுப் பொண்ணு பக்கத்துல உட்கார மட்டும் பிடிக்குதா?. சொல்லுடா? நீ ஒரு முழு ஆம்புளைப் பயல். எப்படிடா உட்காரலாம்? சொல்றியா, இல்ல முதுகுத் தோலை உரிக்கனுமா?”

அவர், சுயம்புவை உலுக்கிக் குலுக்கினார். அவனோ, இரு கரத்தாலும் கண்களை மூடிக்கொண்டான். தலையை பம்பரம்போல் சுழல விட்டான். அந்த மனிதரின் மார்பிலேயே முகம் போட்டு, அவர் கழுத்தைப் பற்றிக்கொண்டு அழுதான். பிறகு, மின்சாரம் ஒழுகும் சுவிட்சைத் தொட்டவன் போல் திடுக்கிட்டு, அவரிடமிருந்து விடுபட்டான். வேணுமுன்னா என்னை போலீஸ்ல ஒப்படையுங்க. அவங்கதான் எல்லாரையும் அங்கேயே அடித்துக் கொல்வாங்களாமே. என்னையும் கொல்லட்டும். என்று அப்பாவித்தனமாக சொல்வதுபோல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/33&oldid=1248853" இலிருந்து மீள்விக்கப்பட்டது