பக்கம்:வாடா மல்லி.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 சு. சமுத்திரம்


அவலக்குரல். அந்த உருவத்திலிருந்து வெளிப்படுகிறது. அபயம் கொடுக்க ஆளிருக்கா என்பதுபோல் அங்குமிங்கும் பார்க்கிறது. அந்த உருவத்திற்குச் சிறிது பின்னால் ஒரு தீப்பந்தக்கூட்டம். அரிவாள், கம்புகளோடு அது துரத்து கிறது. அந்த உருவமோ, தனது சிவப்பு டர்பனை கீழே போட்டுவிட்டுத் தலைவிரி கோலமாய் அங்குமிங்குமாய் ஒடுகிறது. முட்டிக்கால்களில் சிக்கிக்கொள்ளும் அளவிற்கான முடி. உருளைக்கட்டை மாதிரியான உடம்பு. ஒத்தைக்கு ஒத்தையாய், எவரையும் சமாளிக்கும் அந்த உருவம், இப்போது ஓடி, ஒடி ஒவ்வொரு வீட்டு முன்னாலும் நிற்கிறது. நிற்கும் வீடெல்லாம் மூடிக் கொள்கின்றன. கேட்கும் காதுகளெல்லாம் செவிடா கின்றன. இதற்குள் ஒரு தீப்பந்தம் முன்னோக்கி தனித்து நகர்கிறது. ஒரு அரிவாள், அதன் பிடறியிலிருந்து சிறிது குறி விலகி கீழே விழுகிறது. அந்த ஒற்றைத் தரப்பிற்கும், தீப்பந்தத் தரப்பிற்கும் இடைவெளி குறைகிறது. உடனே அங்கே காட்டுக் கத்தல்கள். இங்கே கத்தமுடியாத ஒட்டம். குதிகால் ஓட்டம். ஜன்னலுக்கு அருகே நின்ற லட்சுமியைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுகிறது. அவள் அதற்குப் பதிலாகக் கதவைச் சாத்த முற்படுகிறாள். உடனே, மேகலை அவளைப் பின்னால் தள்ளிவிட்டு, முன்னால் வந்து ஜன்னல் கம்பியில் முகம் பதிக்கிறாள். பீச்சே ஆவோ என்று சொல்லிவிட்டு, ஒடிப்போய் அறைக் கதவைத் திறக்கிறாள். பிறகு கையை இழுத்துப் பிடித்த லட்சுமியை கீழே தள்ளிவிட்டு ஒடுகிறாள். பின்புறக் கதவருகே போகிறாள். கதவைச் சத்தம் போடாமலும் திறக்க வேண்டும். அந்த உருவம் அதற்குள் வெட்டுப்படாமலும் இருக்க வேண்டும். கதவு மெள்ளத் திறக்கப்படுகிறது. இதற்கு மேல் ஒட முடியாது என்பது போல் வெளியே பம்மி நின்ற உருவத்தை, மேகலை தலையைப் பிடித்தோ, தாடியைப் பிடித்தோ உள்ளே இழுத்துப் போடுகிறாள். பிறகு கதவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/330&oldid=1250886" இலிருந்து மீள்விக்கப்பட்டது