பக்கம்:வாடா மல்லி.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 309


இழுத்துச் சாத்துகிறாள். அந்த உருவம் மூச்சு விடுவது நன்றாகவே கேட்கிறது. புயல் மாதிரியான மூச்சு. அவசர அவசரமாய் அவள் காட்டிய சமையலறைக்குள் போகிறது.

இதற்குள், தீப்பந்தக் கும்பல் முன்பக்கக் கதவைத் தட்டுகிறது. எரியும் பந்தங்களின் அடிக்கட்டைகளால் கதவை இடிக்கிறது. லட்சுமி அரற்றுகிறாள். ஆனால், மேகலை அந்த லட்சுமியையும் இழுத்துக்கொண்டு முன்பக்கம் வருகிறாள். கதவைத் திறந்து அகலப்படுத்தி வைத்துக்கொண்டு என்ன வேண்டும் என்று கேட்கிறாள். அந்த சர்தார்ஜியை அதற்குள் சமயலறைக்குள் நகர்த்தி விட்ட தைரியத்தோடும் சமர்த்தோடும் கேட்கிறாள். அந்தக் கூட்டம் அவளை மேலும் கீழுமாகப் பார்க்கிறது. ஆம்பளைகளே சர்தார்ஜி நண்பர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடியாதபோது, இந்த அலியால் முடியுமா என்று தன்னைத்தானே மார்தட்டிக் கொண்டு ஒரு மனிதன் போலான அந்தக் கும்பல் புறப்படுகிறது. மேகலை கதவைத் திறந்தபடியே வைத்திருந்தாள். அங்கே ஆடிய கூட்டம், வேறு பக்கம் ஆடப்போன போதுதான் கதவைப் பூட்டினாள். அந்தச் சமையலறைக்குள் போய் அந்த உருவத்தை முதுகைத் தட்டி நிமிர்த்தி விட்டாள். அதன் கையைப் பிடித்து எந்த நிர்வாண அறைக்குள் வெட்டுப் பட்டாளோ அங்கே கொண்டு போனாள். மெழுகு வர்த்தியைப் பொருத்தினாள். அது அணையப் போவதுபோல் சுருண்டு, பிறகு வீறிட்டது. அறுபது வயதான சர்தார்ஜி. சொட்டை சொடக்கு இல்லாத கருமுடி சிக்கல் சிடுக்கல் இல்லாத தாடி. ஆனாலும் அந்த ஒவ்வொரு முடியும் தனித்து ஆடியது. இரண்டு கைகளையும் ஏந்திக் கொண்டது. அதில் கண்கள் தாரைதாரையாக நீர் கொட்டின. “மேரா பத்தினி. மேரா பேட்டி, மேரா பேட்டா” என்று இலக்கணமற்ற இந்தியில் புலம்பியது. ‘சாக்லெட் நயி ஹை. இந்திராஜி ஹமாரா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/331&oldid=1250888" இலிருந்து மீள்விக்கப்பட்டது