பக்கம்:வாடா மல்லி.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 சு. சமுத்திரம்


உடம்பைப் புரட்டிய அந்தப் பெண்ணை, மேகலையும், அவள் தோழிகளும் பிடித்துக் கொண்டார்கள். உடம்பு முழுவதிலும் ஒட்டிக்கொண்டார்கள். இதற்குள் ஒரு சில மாடிகளிலிருந்து, ஒரு சிலர் இறங்கினார்கள். அவர்களைப் பார்த்த மேகலைக்குக் கோபம் வந்தது. கையிலிருந்த வளையல்களைக் கழற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாய்க் கொடுக்கப் போனாள். குஞ்சம்மா பிடித்துக்கொண்டாள். இதற்குள் கணவனைப் பறி கொடுத்த சர்தாரிணிப் பெண், மேகலையை விட்டுப் பிரிய மனமில்லாமல் கட்டிப்பிடித்துப் புரண்டாள். கத்தினாள், கதறினாள். கணவன் முகத்தை முத்தினாள். மோதினாள்.

மேகலை சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டாள். சர்தார்ஜி முகவரி கொண்ட வீட்டிற்குத் தற்செயலாக போவது போல் போனாள். அங்கே வெளியில் தோழிகளை நிறுத்திவிட்டு, உள்ளே போகிறாள். ஆளுக்கு ஒரு பக்கமாய்ச் சிதறிக் கிடப்பவர்களிடம் ‘ஆப்கா பிதாஜி ஹர்பஜன்சிங் ஹமாரா கர் மே டீக்ஹை. என்கிறாள். அந்தக் குடும்பம் கடைசிவரைக்கும் உயிரைக் கையில் பிடித்திருப்பதுபோல் அவள் வாயைப் பார்க்கிறது. ‘டிக்ஹை என்றவுடன் விவரம் கேட்கிறது. பிறகு ஒருத்தி உள்ளே ஒடிப்போய் ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து மேகலையிடம் நீட்டினாள். இப்படி வந்தது கோபம் அவளுக்கு.

“நாங்க ரூபாய்க்கு ஆசைப்பட்டு வரலை. அப்படி ஆசைப்படுறதுக்கு நாங்க ஆணுமில்ல. பெண்ணுமில்ல. உங்களுக்குப் பணம் வேணுமானால், கேளுங்க. இங்கயே தாரோம். .. லட்சுமிக்கா. பர்ஸ்ல எவ்வளவு பணம்

இருக்குது. கொண்டுவா.”

கூனிக் குறுகிப்போன சர்தார்ஜி குடும்பத்தை ஆறுதலோடு பார்க்கிறாள். பிறகு சுவரில் தொங்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/334&oldid=1250893" இலிருந்து மீள்விக்கப்பட்டது