பக்கம்:வாடா மல்லி.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 313


சர்தார்ஜி படத்தை இவளே எடுத்து ஜாக்கெட்டின் பின் பக்கம் வைத்துக்கொண்டு புறப்படுகிறாள். இங்கே வந்ததுக்கு அத்தாட்சி. அந்த சர்தார்ஜி இதைப் பார்த்தால்தான் சாப்பிடவாவது செய்வார்.

மேகலை தோழிகளோடு திரும்பி நடக்கிறாள். எங்கிருந்தோ இரண்டு சர்தார்ஜிகள் ஒரு வீட்டைப் பார்த்து ஒடுகிறார்கள். அங்கிருந்து இரண்டு தாடி வைக்காத ஆண்கள் ‘ஜல்தி ஆவ், ஜல்தி ஆவ்’ என்று குரல் கொடுத்தபடியே அவர்கள் பக்கமாய் ஓடிப்போய், அவர்களை இழுத்துக்கொண்டு தங்கள் வீட்டுக்குக் கொண்டு போகிறார்கள். ஜன்னல் வழியாய்ப் பார்த்த பெண்கள் சந்தோஷமாகத் தலையை ஆட்டுகிறார்கள். மானுட மரத்தின் கிளைகள் வெட்டப்படுகின்றன. ஆனாலும் அதன் வேர்ப்பிடிப்பு நன்றாகத்தான் இருக்கிறது என்பது போன்ற தியாக பாதுகாப்புக்கள். சுயநல மறுப்பின் அடையாளங்கள், இப்படிப்பட்ட காட்சிகளும், சுயம்புவுக்கும், தோழிகளுக்கும், ஆங்காங்கே கிடைக்கத் தான் செய்தன.

அவர்கள் அங்குமிங்குமாய்ச் சுற்றி, தெருக்களின் பிணத்தோடு பிணமாய்க் கிடந்த அபலைப் பெண்களைக் கட்டிப்பிடித்து அழுதார்கள். அலங்கோலமாய்க் கிடந்தவர்களின் கால்களைச் சரிப்படுத்தி வைத்தார்கள். லேசு லேசான மனித நடமாட்டம் தெரிந்தது. இவர்களைப் பார்த்து பலர் வீதிக்கு வந்தார்கள். இவர்களிடமே விவரம் கேட்டார்கள். வன்முறை பெருத்தபோது மானுடம் சிறுத்துப் போவதற்குக் காரணமான தெருவோருக்கும் உதவாத சிறிய வீணர்கள். வீணர்களில் ஒருத்தர், இவர்களிடம் கேள்வியும் பதிலுமாய்ப் பேசினார்.

“பஞ்சாபிலிருந்து. இந்துக்களை அப்படியே வெட்டி வெட்டி சர்தார்ஜிகள் ரயிலுல அனுப்பி வைக்காங்களாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/335&oldid=1250894" இலிருந்து மீள்விக்கப்பட்டது