பக்கம்:வாடா மல்லி.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 சு. சமுத்திரம்


டில்லிக்கு தண்ணிர் கொடுக்கிற யமுனை நிதியில விஷத்தைக் கலந்துட்டாங்களாம். டில்லியில் பல தொட்டிகளில் விஷத்தைப் போட்டுக் கலக்கிட்டாங்களாம். கனாட்பிளேஸ்ல ஐம்பதுபேர் செத்துட்டாங்களாம். இன்றைக்குக் காலையில் பல இடத்தில ஒட்டுன போஸ்டர்ல படிச்சேன். தண்ணிய குடிக்கவே பயமா இருக்கு. ஆனால் தாகம். ஒங்க வீட்ல பழைய தண்ணிர் இருக்குமா. கிடைக்குமா.”

மேகலை அந்த ஆசாமியை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்தாள். பக்கத்திலேயே மனிதப் பிணங்கள். அடியும் தலையுமாக உச்சிமுதல் பாதம் வரை ஒன்றுபட்டு நின்ற மனித எலும்புகள் சிதறிக் கிடக்கின்றன. ரத்த நாளங்கள் வெடித்துக் கிடக்கின்றன. ஆனால் அவருக்குத் தாகம்.

மேகலை அங்குமிங்கும் பார்க்கிறாள். ஒரு தெருக்குழாய். அங்கே போகிறாள். தோழிகள் இழுத்துப் பிடிக்கிறார்கள். அந்தக் குழாயைத் திறந்து தண்ணிரைக் குடிக்கிறாள். கால் நிமிடத்திற்குப் பிறகு வாயில் உள்ள தண்ணிரை அவளிடம் கேள்வி கேட்டவர் பக்கம் கொப்பளிக்கிறாள். செத்தால் சாவோம் என்கிற வேகம்! சாகாவிட்டால் இந்தப் பொய்யைத் தெரிந்தவர்களிடம் சொல்ல வேண்டும் என்ற தாகம்!

அந்த நால்வரும், மயானச் சாலைகள் வழியாகக் குடியிருப்புக்குத் திரும்புகிறார்கள். நீலிமா குறுக்கும் நெடுக்குமாய்ச் சுற்றுகிறாள். இன்னும் எந்தக் கதவும் திறக்கப்படவில்லை. சுடுகாட்டிலாவது வெட்டியான் சத்தம் இருக்கும். சுடலைத் தீயின் பாம்புபோல் சீறும் சத்தமாவது கேட்கும். ஆனால் இதுவோ மனிதர்கள் சும்மா மூச்சு மட்டுமே விட்டுக்கொண்டிருக்கும் மயானப் பகுதி. இன்னும் ஒரு வாரத்திற்குத் தம்மடக்கி வாழ்வதற்காக மூச்சைக்கூட அடக்கி விடுவது போன்ற ஒரு ஒத்திகை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/336&oldid=1250896" இலிருந்து மீள்விக்கப்பட்டது